Followers

Monday, December 16, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

Sidhagar V. N said
வணக்கம் !
 நான் பள்ளி காலங்களில் மிகவும் ஒல்லியாக இருப்பேன். என் நண்பர்கள் என் அண்ணன் கூட என்னை கிண்டல் செய்வார்கள். ஆனால் ராகு திசை தொடங்கிய 2006 லிருந்து தொப்பை வந்து விட்டது. ராகு திசையும் இப்படி செய்யுமா?

பதில்

வணக்கம் ஒவ்வொரு தசாவும் ஒவ்வொரு விதத்தில் செயல்படும். ஒவ்வொரு கிரகங்களும் அதற்கு என்று உள்ள உணவுகள் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். ராகு தசாவை பொருத்தவரை அன்னிய உணவின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். ஜங்புட் போன்றவற்றில் மனது நாட்டம் போகும். 

நீண்ட நாள்கள் உணவுகள் கெடாமல் இருக்க உப்பு தன்மை தான் அதிகமாக சேர்த்து இருப்பார்கள். அதனை சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் வந்துவிடும். 

இயற்கையாகவே நாம் பிறந்த ஊரில் விளையும் பொருட்களை கொண்டு நாம் சமைத்து சாப்பிடும்பொழுது நமக்கு எந்தவித தீங்கும் ஏற்பட்டுவிடாது. இன்றைய காலகட்டத்தில் காலையில் இந்தியாவில் இருப்பவர்கள் மாலையில் வேறு நாட்டில் இருக்கின்றனர். உணவு பழக்கவழக்கங்களும் மாறுகின்றது. அடுத்த நாட்டு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஒற்றுவராது. அதிகமாக சாப்பிடும்பொழுது அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. தொப்பையும் வருகிறது. 

கிரகங்களை பொருத்தவரை சாப்பாட்டின் தன்மையை மீது ஈர்க்கும். ஆறாவது வீட்டை பொருத்தவரை ஜீரணத்தை காட்டும் இடம் அதனால் அந்த இடத்தை பொருத்தும் அமையும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொருத்து உடல்நிலையின் மாற்றத்தை நாம் காணவேண்டும். சரியான உடற்பயிற்சியும் உடலுக்கு தேவை. உடற்பயிற்சி இல்லை என்றால் கண்ட நோயும் உடலில் வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ATOMYOGI said...

மிக்க நன்றி.