Followers

Saturday, January 18, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 12


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் இருக்கும் கிரகநிலைகளின் பலன்கள் கண்டிப்பாக நடைபெறும். நடைபெறாமல் மட்டும் இருக்கவே இருக்காது. ஜாதகத்தில் உள்ள நல்லது கெட்டது அனைத்தையும் கொடுத்தவிடவேண்டும் என்பது கிரகங்களுக்கு இடப்பட்ட ஒரு விதி அந்த விதிப்படியே இயங்கிக்கொண்டிருக்கும். 

என்னை தேடி ஒரு நபர் வந்தார் அந்த நபர் தன்னுடைய பையனுக்கு திருமணம் முடிந்து ஏழுவருடங்கள் ஆகின்றது குழந்தை பாக்கியம் இல்லை என்றார். அவர்கள் ஏழுவருடங்கள் பார்க்காத சோதிடர்கள் இல்லை பார்க்காத சாமியார்கள் இல்லை. இப்பொழுது வரும் அப்பொழுது வரும் என்று சொன்னார்களே தவிர குழந்தை பாக்கியம் என்பது இல்லை என்றார்கள்.

அவரை நான் பார்க்கும்பொழுது அவரின் பையில் ஒரு குருவின் படம் இருந்தது. சரி என்று நீங்கள் யார் எங்கு இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அப்பொழுது அவர் ஒரு குருவின் சீடர் என்றார். இவர் குரு நடத்தும் ஆசிரமத்திற்க்கு ஒரு நகரத்திற்க்கு தலைமை பொறுப்பில் இருப்பவர். அவர்கள் நடத்தும் வகுப்புக்கு எல்லாம் இவர் தான் தலைமை தாங்குவார் என்று தெரியவந்தது. 

இவ்வளவுக்கும் அந்த சாமியாரை அடிக்கடி சந்திக்ககூடியவர். அவரின் சீடரின் குடும்பத்திற்க்கு இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது. அவரிடம் நான் மேலும் பேசும்பொழுது நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள். இவ்வளவு பெரிய குரு இருக்கும்பொழுது அடையாரில் ஒரு பெட்டிக்கடையில் இருக்கும் என்னை தேடி வந்து இருக்கின்றீர்களே என்றேன். இல்லை உங்களிடம் சென்றால் தான் இந்த பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார் என்றார்.

உலகம் முழுவதும் ஆசிரமம் வைத்திருக்கும் ஒரு சாமியாரால் தீர்க்கமுடியாத பிரச்சினையை என்னிடம் எடுத்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை குரு என்று ஏற்றுக்கொண்டால் அவர் உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் தீர்க்ககூடியவராக அவர் தான் இருக்கவேண்டும். அவரை விட்டுவிட்டு என்னை தேடகூடாது என்றேன். அவர் அவரிடமும் இதனை சொல்லிவிட்டேன் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றார்.

மேலும் என்னிடம் சொன்னார் நான் ஒரு காலத்தில் நினைத்துக்கொண்டு இருந்தேன். கிரகங்கள் ஒன்றும் செய்யாது ஜாதகம் எல்லாம் பொய் என்று இருந்தேன். என்னுடைய ஆன்மீகவகுப்பிற்க்கு வருபவர்களுக்கு கூட ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சி நடந்துக்கொண்டிருக்கும் அதனை எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது என்றேன். இப்பொழுது தான் புரிகிறது அதனின் தாக்கத்தை உணரமுடிகிறது என்றார். இவரே பல பேருக்கு ஆன்மீக வகுப்பை எடுக்கிறார் இவரின் பிரச்சினைக்கு அடுத்தவரை நாடினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் தன்னுடைய பிரச்சினையை தீர்ப்பதற்க்கே அவ்வளவு பாடுபடுகிறார்கள். இவர்கள் எப்படி அடுத்தவர்களின் பிரச்சினையை தீர்க்கமுடியும். இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் புத்தகத்தில் உள்ள விசயத்தை அப்படியே படித்துக்கொண்டு காலத்திற்க்கு தகுந்தார்போல் மாற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்களே தவிர பிரச்சினையை தீர்க்க இவர்கள் ஒன்றும் செய்வதில்லை.

ஒரு அம்மனை வைத்து நான் கும்பிடுகிறேன் என்றால் அந்த அம்மன் முதலில் என்னை பாதுகாக்கவேண்டும் அதன் பிறகு தான் உங்களுக்கு பாதுகாப்பு தரும். என்னை அனைத்து பிரச்சினையிலும் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு கவசம் எனக்கு இருந்தால் மட்டுமே அதனை எடுத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியும்.

எனது குரு என்னிடம் சொல்லுவார் முதலில் உன்னை பாதுகாத்துக்கொள் பிறகு உன்னை தேடி வருபவர்களுக்கு பாதுகாப்பை கொடு என்பார். கிரகங்களில் பாதிப்பில் இருந்து நீ தப்பிக்க கற்றுக்கொள் பிறகு உன்னை நாடி வருபவர்களுக்கு அதனை செய் என்பார். நான் எல்லாவற்றையும் பேசிவிட்டு நான் கோட்டையை விட்டுவிட்டு நின்றால் எப்படி அடுத்தவர்களை காப்பாற்றமுடியும்.

முதன் முதலில் பயிற்சியில் எனது குரு உனக்கு என்றைக்கு சந்திராஷ்டம் என்று கேட்பார். அந்த நாளை நான் சொன்னால் முதலில் அந்த சந்திராஷ்டமத்தை வென்று காட்டு பார்க்கலாம் என்பார். நான் அன்றைய நாளில் செய்து காட்டவேண்டும் அப்பொழுது மட்டுமே அவர் ஏற்றுக்கொள்வார்.

உங்களுக்கும் தெரியும் சந்திராஷ்டம் என்றால் உங்களுக்கு எப்படியும் பிரச்சினை வரும் என்று தெரியும் உங்களின் குருவிடம் சென்று இந்த சந்திராஷ்டம் அன்று எனக்கு சந்திராஷ்டம பாதிப்பு வரகூடாது என்று கேட்டுபாருங்கள். அப்பொழுதே தெரிந்துவிடும் அவர் குருவா அல்லது புத்தககுருவா புரியும்.

இதனை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் முதலில் நாம் கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன வழி இருக்கின்றது என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு அனைத்தையும் நீங்கள் தேடிக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை தேரை இழுத்து தெருவில் விட்டுவிடும்.கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

உங்கள் பதிவுகள் இல்லாமல் போரடித்து விட்டது.
மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.

rajeshsubbu said...

வணக்கம் இனி தொடர்ந்து பார்க்கலாம்

Unknown said...

உங்கள் பதிவுகள் இல்லாமல் போரடித்து விட்டது.