Followers

Friday, January 24, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 16


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டாவது வீட்டை வைத்து பிரச்சினையும் தீர்வும் பார்த்து வந்தோம் இடையில் சில வேறு தகவலையும் பார்த்தோம். தொடர்ந்து இரண்டாவது வீட்டை வைத்தே பார்க்கலாம். இரண்டாவது வீடு கெடும்பொழுது நமக்கு குழந்தை பாக்கியம் மற்றும் திருமணவாழ்க்கை பாதிப்படைய தான் செய்யும் அதே நேரத்தில் இரண்டாவது வீடு கெட்டு திருமண வாழ்க்கை பாதிப்படைகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு சிலர் என்ன செய்வார் புதியதாக இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.

முதல் திருமணம் கெடும்பொழுது இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் இரண்டாவது வீடு கெட்டு இருந்தால் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்தாலும் அந்த திருமண வாழ்க்கை உங்களுக்கு நிலைக்காது. பிரசசினையை தான் தரும்.

இரண்டாவது வீடு நன்றாக இருந்து முதல் திருமண வாழ்க்கை சரியில்லை என்று வரும்பொழுது நீங்கள் தாராளமாக இரண்டாவது திருமண வாழ்க்கை ஏற்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது கணவன் அல்லது மனைவியோடு நீங்கள் நிம்மதியாக வாழமுடியும்.

இரண்டாவது வீடு கெடும்பொழுது ஒருவருக்கு திருமணம் செய்துக்கொண்டே இருக்கலாம். திருமணம் செய்தே அதில் ஒரு ஆராய்ச்சி படிப்பை முடிக்கும் அளவுக்கு திருமணம் செய்துக்கொள்ளமுடியும். எந்த ஒரு திருமணம் நிலைக்காது.

இரண்டாவது வீடு கெட்டால் ஒரு சிலர் மனைவியை பிரிந்து தனியாக வெளியூர் பயணம் அடிக்கடி செல்வார்கள். அப்படி செல்லும்பொழுது அவர்களுக்கு புதிய ஒரு தொடர்பும் ஏற்படும்.ஒரு சிலர் முதல் வீட்டிற்க்கு தெரியாமல் புதிய ஒரு தொடர்போடு வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்.

இதற்கு தீர்வு முதல் மனைவி அல்லது கணவனோடு முடிந்தளவு கீழ் இறங்கி வாழ்ந்துவிடுவது நல்லது. முதல் மனைவியை தேர்ந்தெடுக்கும்பொழுதே நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Sir,

2nd house owner(Sani) placed in good position(ucham) and mandhi in second house(kumbam). How this placement will work.