Followers

Tuesday, January 7, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 7


வணக்கம் நண்பர்களே!
                    லக்கினாதிபதியை வைத்து சரிசெய்துக்கொள்வதைப்பற்றி சொல்லிருந்தேன். பல பேர்கள் படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லக்கினாதிபதி ஒரு சிலருக்கு நன்றாக இருப்பது போல் காட்டு்ம் அவர்கள் பிரச்சினையில் இருப்பார்கள் அதற்கு எல்லாம் காரணம் லக்கினாதிபதி என்பவர் மறைவிடுங்களின் வீட்டிற்க்கு சொந்தகாரர்களாக இருப்பார்கள்.

லக்கினாதிபதி மறைவிடங்களுக்கு சொந்தகாரர்களாக இருந்தால்சம்பந்தம் இல்லாமல் பழியை அவர்கள் மீது சமுதாயம் போட்டுவிடும். ஒரு உதாரணம் வழியாக சொல்லுகிறேன். ஒரு பங்ஷனுக்கு செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நல்ல டிரஸ் நல்ல மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு செல்லுவீர்கள் வழியில் யாராது ஒரு நபர் உங்களின் மீது சாக்கடையை அள்ளி வீசிவீடுவார்கள். உங்களுக்கு மானப்பிரச்சினை இப்படி தான் வரும். 

லக்கினாதிபதி வைத்து எவவளவு நாள் தான் கும்மி அடிப்பது அடுத்ததை பார்க்கலாம். லக்கினாதிபதி வைத்து நிறைய தகவல் சொல்லலாம் அதனை சொல்லி உங்களை குழப்பவில்லை. நேரில் சந்திக்கும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டாவது வீட்டை பார்க்கலாம். மிகவும் முக்கியமான வீடு இந்த வீடு கெட்டாலும் பிரச்சினை தான். ஏன் என்றால் இல்லறவாழ்க்கைக்கு மிகவும் துணைபுரிவது இந்த வீடு. உங்களின் குடும்ப வாழ்க்கையை காட்டும் இடம் என்பதால் இது முக்கியமாக கருதப்படுகிறது. இந்த வீடு கெட்டாலும் மணவாழ்க்கை அமையாது.

ஒருவன் துறவியாக வேண்டும் என்றால் அவனுக்கு குடும்பம் என்பது இருக்ககூடாது. அவனுக்கு பணம் என்பது இருக்ககூடாது அன்றைக்கு அன்றைக்கு சாப்பாட்டுக்கு மட்டும் பணம் இருக்கவேண்டும் அடுத்தநாளுக்கு அவனின் அனைத்த தேவைக்கும் பிறரை நம்பி தான் இருக்கவேண்டும் அப்படி ஒரு நிலையை இந்த வீடு ஏற்படுத்திக்கொடுக்கும். இன்றைய துறவிக்கு எல்லாம் இந்த வீடு மிகவும் சூப்பராக இருக்கின்றது. பணம் கொட்டு கொட்டு என்று கொட்டுகிறது. ஒரு துறவியாக ஆகவேண்டும் என்றால் அவனுக்கு முதல் தகுதி குடும்பஸ்தானம் அடிவாங்கவேண்டும்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: