Followers

Friday, January 3, 2014

குரு தசா பலன்கள் பகுதி 70


வணக்கம் நண்பர்களே !
                    குரு தசாவில் சுக்கிரனின் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். 

சுக்கிரன் இரண்டாவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தினால் உங்களின் குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருப்பார்கள். பெண்களின் வழியில் வருமானம் வரும். உங்களின் வருமானம் மிகஅதிகமாக இருக்கும் அந்த வருமானமும் வேறு வழியில் வருவது போல் இருக்கும்.

சுக்கிரன் மூன்றாவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தினால் அழகுசாதனப்பொருட்கள் ஏஜென்ஜி தொழில் கிடைக்கும். பெண்கள் தங்கும் விடுதிக்கு அருகில் நீங்கள் குடிபோவீர்கள்.

சுக்கிரன் நான்காவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தினால் புதிதாக சொகுசு வாகனங்கள் வாங்குவீர்கள்.  ஒரு சிலர் புதிய வீடுகள் கூட வாங்கமுடியும்.வீடுகள் கோவிலுக்கு அருகில் அமையும் அல்லது மடங்களாக இருக்கும் இடத்தில் கூட அமைய வாய்ப்பு இருக்கிறது.

சுக்கிரன் ஐந்தாவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தினால் காதல் வயப்படுவீர்கள் பிறக்கும்  குழந்தை பெண் குழந்தைகளாக இருக்கும். புத்திகூர்மை மேம்படும். சிக்கலை எளிதில் சமாளிப்பீர்கள்.

சுக்கிரன் ஆறாவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தினால் மர்ம உறுப்பில் பிரச்சினை ஏற்படுத்திவிடுவார். கிட்னி பிராப்பளம் ஏற்படும். அதிகமாக பெண்களை வேலைக்கு சேர்ப்பீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: