Followers

Wednesday, January 8, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டாவது வீட்டைப்பற்றி சொல்லிருந்தேன் அல்லவா. இதனை வைத்து ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுகிறேன் படித்து பாருங்கள். தஞ்சாவூரில் இருக்கும்பொழுது ஒருவர் தன்னுடைய பையனின் ஜாதகத்தை கொண்டு வந்து காண்பித்தார். அந்த பையன் எனக்கும் தெரிந்த ஒரு நபர் என்பதால் அவரின் தந்தை என்னை தேடி வந்து இப்படி நடக்கிறது ஜாதகத்தில் கோளாறு இருக்கின்றதா என்று கேட்டார்.

அந்த பையன் செய்தது தகாத உறவுகளை வைத்துக்கொண்டு இருந்தான். வீட்டில் வசதி இருந்ததால் வீட்டில் இருந்து பணத்தை எல்லாம் இதற்க்காகவே செலவு செய்தான்.மனது அதனை நோக்கியே சென்றது. ஒரு கட்டத்தில் அனைத்தையும் அதற்க்கே செலவு செய்தான்.

கிராமத்தில் இருப்பதால் தந்தைக்கு கவலை பையன் இப்படி சென்று தன் மானத்தை வாங்குகிறானே என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது தான் என்னிடம் ஜாதகத்தை நீட்டினார். அந்த பையனின் ஜாதகத்தில் லக்கினாதிபதி பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்திருந்தார் கூடுதலாக இரண்டாவது வீட்டு அதிபதியும் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்திருந்தார். கேது மூன்றாவது வீட்டில் அமர்ந்திருந்தார். 

பையன் போகத்திற்க்கே அதிகம் விருப்பபட்டு சென்றுக்கொண்டிருக்கிறான் எவ்வளவு நாள் தான் அப்படி செல்லமுடியும். உடல் சக்தியும் போய்விட்டது பணமும் போய்க்கொண்டிருக்கிறது அதோடு சேர்ந்து மானமும் கப்பல் ஏறுகிறது. கிராமத்தில் இப்படி எல்லாம் சென்றால் ஊரில் அந்த பையன் உருப்படாத பையன் என்று சொல்லுவார்கள்.

திருமணவயதில் தான் இருப்பதால் நான் அந்த பையனிடம் சென்று நீ இப்படி இருப்பதற்க்கு காரணம் உன் விதி இப்படி எழுதியிருக்கிறது நீ நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னேன். அவனும் என்னுடைய வார்த்தையை நம்பி சொல் என்று சொன்னான். நீ முதலில் இதனை எல்லாம் விட்டுவிட்டு ஒரு திருமணத்தை செய்துக்கொள் என்றேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.

இந்த இடத்தில் ஒன்றை கவனியுங்கள் போகம் என்று போனவனுக்கு அந்த விசயத்திற்க்கு தீனி போடவேண்டும் அதே நேரத்தில் அதில் இருந்து காப்பாற்றப்படவேண்டும். போகத்திற்க்கு திருமணம். அவர் அப்பாவிடம் பெண்ணை உடனே பாருங்கள் இவன் ஆடிய ஆட்டத்திற்க்கு எவனும் பெண் தரமாட்டார்கள் யாராவது ஏழை வீட்டு பெண்ணை பார்த்து திருமணம் செய்யுஙகள் என்று சொல்லிருந்தேன்.

ஒரு விவசாய காலத்தில் 10 மூட்டை நெல் விளையும் என்றால் விவசாயியாக இருக்கும் நபர் அந்த வருடம் 15 மூட்டை நெல்விளைந்தால் மிராசு என்று ஊரில் சொல்லிவிடுவார்கள். அவருக்கு நல்ல நிலம் இருந்தாலும் தன் கெளரவத்திற்க்கு ஏழை வீட்டில் எப்படி பெண்ணை எடுப்பது என்று கேட்டார்.

நான் அவரிடம் இவனே செத்துபோய்விடுவான் போலிருக்கிறது. போகசக்தி அதிகமாக வெளியில் செல்லும்பொழுது உயிர்சக்தி வெளியில் போய்விடும். கெளரவம் எல்லாத்தையும் விட்டுவிட்டு இவனை காப்பாற்றுவதற்க்க வழியை தேடுங்கள் என்று சொன்னேன்.

பனிரெண்டாவது வீடு என்பது மிக முக்கியம் போகம் மற்றும் நாம் செல்லும் மரணவாயில் இதனை காட்டும் இடம்.போகம் அதிகமாக மரணமும் உங்களை நெருங்கிவந்துவிடும்.

பொதுவாக ஊரை சுற்றிபவனுக்கு பெண் பார்ப்பது என்பது மிககடினம் அதேபோல் மேட்ரிமோனியால் சைட் பார்ப்பவனுக்கும் பெண் பார்ப்பது கடினம். இதனை பார்க்கலாமா அதனை பார்க்கலாமா என்று அலைபவர்களாக இருப்பார்கள்.

நான் சொன்னது மாதிரியே ஏழை வீட்டில் ஒரு அழகான பெண்ணை பார்த்து திருமணம் நடத்திவைத்தனர். போகத்திற்க்கு திருமணம் செய்துவைத்ததுவிட்டார்கள். இவன் ஊர் சுற்றுபவன் அல்லவா அதற்க்காக இவனுக்கு யாத்திரையை நோக்கி செல்லவைத்தேன். பல புண்ணியத்தலத்திற்க்கு சென்று நீராடி விட்டு இறைவனை தரிசனம் செய்ய சொன்னேன்.

பித்ரு தோஷம் இருப்பதால் இவனுக்கு ஆன்மீகம் எளிதில் கைவந்தது. இப்பொழுது நன்றாக இருக்கிறான். இவனுக்கு ஒரு ஹெவி டோஸ் தந்தேன். இவனின் மனதில் பலபேர் இருந்தார்கள் அல்லவா அதனை உடைத்து ஒருவர் மட்டும் இருப்பது போல் அம்மனை வைத்து செய்துவிட்டேன்.  பிரச்சினை முடிந்தது. லக்கினாதிபதி தனவீட்டு அதிபதி இருவரும் சேர்ந்து பனிரெண்டில் அமரும்பொழுது வந்த பிரச்சினை மற்றும் அதனை தீர்த்தவிதத்தை சொல்லிவிட்டேன்.

இவரிடம் நான் வாங்கியது அபபொழுதே பத்தாயிரம் ரூபாய் அந்த நேரத்தில் இது அதிகம் தான் இருந்தாலும் எங்கேயே சென்று பணத்தை கொடுப்பார்கள் நாம் பணம் கேட்டால் என்ன தவறு இருக்கிறது.

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க ரெடியாவிட்டீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: