Followers

Sunday, January 19, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு நண்பரின் வீட்டிற்க்கு சென்றுருந்தேன் அப்பொழுது நண்பரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு நான் கோச்சாரப்பலன்களை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த நண்பர் என்ன சார் கோச்சாரப்பலன்களை மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள் தசாப்பலன்களை சொல்லமாட்டீர்களாக என்று கேட்டார்.

அவருக்கு சுக்கிரன் தசா ஆரம்பித்து குறைந்தது ஆறு வருடங்கள் சென்றுக்கொண்டிருக்கிறது. நான் அவரிடம் உங்களின் ஜாதகத்தில் தசாநாதன் வேலை செய்யவில்லை அதனால் கோச்சாரப்பலன்களை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக பல பேர்களின் ஜாதகத்தில் தசாநாதன் ஒழுங்காக வேலை செய்யவில்லை அதனால் கோச்சாரப்பலன்களை சொல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. தசாநாதன் சரியில்லை என்றால் கோச்சாரப்பலன்களை சொல்லிதான் ஆகாவேண்டும். என்ன கோச்சாரப்பலன்களால் வரும் நன்மை சிறிய காலத்திற்க்கு மட்டும் இருக்கும் அதன் பிறகு போய்விடும்.

கோச்சாரப்பலன்களை வைத்துக்கொண்டு நாம் மனக்கணக்கு போட்டுக்கொண்டு இருக்ககூடாது. தசாப்பலன்கள் நன்றாக நடந்தால் நாம் வேண்டியதை பெறமுடியும் தசாப்பலன்கள் வேலை செய்யவில்லை என்றால் ஜாதகத்தால் ஒன்றும் பயன் இல்லை. 

உங்களுக்கு எந்த தசா நடந்தாலும் அந்த தசாநாதனுக்கு ஒரு பரிகாரத்தை கண்டிப்பாக செய்துக்கொள்வது நல்லது.சோதிடம் படித்தவர்களே இதனை செய்வதில்லை ஆனால் நீங்கள் கண்டிப்பாக செய்துக்கொள்வது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: