Followers

Saturday, January 11, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் ரவி மாதவன் அவர்கள் புலால் மறுத்தலைப்பற்றி திருவள்ளுவர் கூறியதை அப்படியே அனுப்பியுள்ளார். தங்களுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய குறளில் உள்ளதை படித்து பார்த்தேன்.

26. புலால் மறுத்தல்


குறள் 251 தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?
பொருள்
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? 

சைவம் சாப்பிடுகிறவர்கள் அனைவரும் அருளோடு இருக்கின்றனரா?

குறள் 252 
ஆட்சி போற்றாதார்க்கு இல்லை: அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.


பொருள்

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.

சைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் சிறப்போடு இருக்கின்றனரா?

நிறைய குறள் எழுதியுள்ளீர்கள். அனைத்திற்க்கும் என்னால் பதில் எழுதமுடியும். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்பதால் விட்டுவிட்டேன். பொதுவாக ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு பெருமை சிறப்பு எல்லாம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். வள்ளுவர் சொல்லுகிறார் என்றால் புலால் உண்ணாமல் இருந்தால் உனக்கு உலகம் எல்லாம் மரியாதை கொடுக்கும் என்கிறார். உலகத்தில் உள்ளவர்களின் மரியாதையை எதிர்பார்த்து நான் எதுவும் செய்வதில்லை. சதா மனிதனுக்குள் மனிதன் சிறப்பு செய்வது எல்லாம் வள்ளுவர் சொல்லுவார் ஆனால் நான் சொல்லமாட்டேன்.

நம்மை போல் உள்ள மனிதன் நமக்கு ஏன் சிறப்பு  செய்யவேண்டும். எதையாவது எதிர்பார்த்தால் அது ஆன்மீகமாக இருக்காது. போட்டியை உருவாக்கிவிடும். அடித்துக்கொள்வார்கள்.

அந்த காலத்தில் இருந்து ஆன்மீகம் என்பது கட்சி போல் தான் வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்த கட்சிக்கு ஒரு கொடி உள்ளது போல் இந்த ஆன்மீகவாதிக்கு இந்த உடை போடவேண்டும். இதனை சாப்பிடவேண்டும என்று கடைபிடித்து வருகிறார்கள். கட்சிக்கு சின்னம் கொடி எதற்க்கு அப்பொழுது தான் மனிதனை கவர்ந்து இழுக்கமுடியும். நான் இதில் உள்ளேன் நீங்களும் வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லும். 

ஆன்மீகமும் இப்படிப்பட்டது தான் நான் காவி அணிந்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் இங்கு வாருங்கள். நான் வெள்ளைஅங்கி அணிந்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் இங்கு வாருங்கள்.என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் எதையாவது எதிர்பார்த்து செய்யகின்ற வேலை தான் இதுவே தவிர உண்மையான ஆன்மீகம் இது கிடையாது.கட்சி செய்வதையே ஆன்மீகமும் செய்கிறது.

ஒரு ஆன்மீகவாதி அசைவம் சாப்பிட்டாலும் அதனை வெளியில் சொல்லமாட்டான். ஏன் என்றால் கூட்டம் வராது என்று அவனுக்கு தெரியும். அவனைப்பற்றி தவறாக நினைப்பார்கள் என்று வெளியில் சொல்ல மாட்டார்கள். சோதிடர்களாக இருந்தால் கூட இப்படி தான் செய்வார்கள்.

நான் பொதுவாக வெளியில் சொல்லுகிறேன். எனக்கு பாதிப்பு வந்தால் வரட்டும் என்று தான் பதிவில் சொல்லுகிறேன். என்னை தவறாக நினைத்தால் நினைக்கட்டும் என்று தான் வெளியில் சொல்லுகிறேன். நான் எதற்க்கும் கவலைப்படவில்லை. நீங்களே நினைத்து பாருங்கள் எந்த ஆன்மீகவாதியாவது இப்படி சொல்லுவான அசைவம் சாப்பிடு எப்படி வேண்டுமானாலும் இரு என்று சொல்லுவானா?

இதனை எல்லாம் வெளியில் சொல்லும்பொழுது நான் பயப்படாமல் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கிறது. புலால் உண்டால் உண்மையான அருள் இருக்காது என்று சொல்லுகிறீர்களே புலால் உண்டு அந்த அருள் என்னிடம் இருக்கின்றது என்று நம்புகிறேன். அது தான் என்னை காப்பாற்றுகிறது. என்னை தேடி வருபவனையும் காப்பாற்றுகிறது.

எனக்கு சோதிடம் மட்டும் தான் தொழில் அடையாரில் இருக்கும் எனது அலுவலகத்தின் வாடகை பதினோரு ஆயிரம் மற்றும் எனது குடும்பத்திற்க்கு என்று செலவுக்கு அனுப்பவேண்டும். நான் இங்கு தங்கும் செலவு சாப்பாடு செலவு என்று மாதம் முப்பது ஆயிரத்திற்க்கு மேல் சம்பாதித்தால் மட்டுமே என்னால் சென்னையில் இருக்கமுடியும்.நான் செய்து கொடுக்கும் காரியங்களுக்கு பணம் வாங்காமல் செய்துக்கொடுக்கிறேன்.வேலை முடிந்த பிறகு தான் பணம் எனக்கு கிடைக்கும். எந்த நம்பிக்கையில் அப்படி நான் செய்யமுடியும். 

ஆன்மீகம் நாம் சாப்பிடும் சாப்பிட்டிலேயோ உடுத்தும் உடையிலேயோ அடுத்தவர் தரும் சிறப்பிலேயோ கண்டிப்பாக கிடையாது. அது நம் மனதில் இருக்கிறது. 

யாரையும் எதற்க்கும் தேடிபோகவில்லை அவர்கள் விருப்பட்டால் மட்டுமே செல்வது உண்டு. இல்லை என்றால் நான் உண்டு என் வேலை உண்டு என்று தான் இருப்பேன். கடுமையான தோஷம் ஏற்பட்டவர்களை மற்றும் ஏழைகளை நான் தேடி செல்வது உண்டு அதுவும் மூன்று முறைக்கு மேல் கிடையாது. என்னை தேடி ஆட்கள் வருவார்கள் என்று அருள் நம்பிக்கை என்னிடம் 100 சதவீதம் உள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Swami said...

ஒரு ஆன்மீகவாதி இறைச்சி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், புலால் சாப்பிடாதவர்கள் எல்லாம் மகான்களும் இல்லை.இன துவேஷம் கொண்டு மக்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு சைவ உணவாளர். ஆனால், ஒரு உயிர் கொல்லப்படும் போது, அதன் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம், பயத்தால் துடிக்கும் போது ,அதன் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள், நாம் அதை உட்கொள்ளும்போது, நாம் உடலிலும் பரவுகிறது. அது நுண்ணியமாக நாம் சுக்ஷ்மா உடலை தாக்குகிறது.


நான் புலால் உண்கிறேன் என்று சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது. ஆனால், இறைச்சி உண்ணுவதை விட்டு ஒழித்தால், நீங்கள் இப்போது இருக்கும் நிலயை விட மிக சிறந்த நிலயை அடைவீர்கள் என்பது சத்யம்.