Followers

Monday, January 20, 2014

குடும்ப உறவுகள்


ணக்கம் ண்பர்களே!
                    இன்று குடும்ப உறவுகள் எல்லாம் ஒன்றுமையாக இருந்தாலும் ஒரு சில குடும்பங்களில் உறவுகள் என்பது கொஞ்சம் பிரச்சினையை சந்திக்கிறது. குடும்ப உறவுகள் என்று சொல்லுவது குடும்பத்திற்க்குள்ளே உள்ள நபர்களை தானே தவிர வேறு உறவுகளை நான் குறிப்பிடவில்லை. 

ஒரு தந்தை தாய் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குள்ளே ஒரு நல்ல ஒற்றுமை என்பது இல்லாமல் இருக்கின்றது. இது அதிகமாக படித்த நபர்களிடம் தான் இந்த பிரச்சினை இருக்கின்றது. முதலில் கணவன் மனைவிக்குள்ளேயே ஒற்றுமை என்பது இல்லாமல் இருக்கின்றது. ஏதோ வாழ்கிறோம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்ற ரீதியாக மட்டுமே இருக்கின்றது. இவர்களின் பிரச்சினை இவர்களின் குழந்தைகளை பாதிக்க செய்கிறது. அவர்களின் எதிர்காலமும் பிரச்சினை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

திருமண உறவு என்று வந்துவிட்டால் அதன் பிறகு இவர் அல்லது இவள் தான் உலகம் என்று இருக்கவேண்டும்.பொதுவாக எந்த ஒரு விசயத்தையும் இருவரும் கலந்து ஆலோசிக்க செய்யவேண்டும். கணவன் தனி உலகம் மனைவி தனி உலகம் என்று போனால் கண்டிப்பாக உங்களின் குடும்பம் சீரழிந்துவிடும். 

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள உறவும் சிக்கலை சந்திக்கிறது. இன்று அதிகமாக பிரச்சினை உருவாகுவது செல்போன் வழியாக தான் இருக்கின்றது. ஒரு பெற்றோர் தனக்கு செல்போன் வாங்கி கொடுத்தால் அந்த இடத்தில் அவர்களின் நம்பிக்கையை நாம் பார்க்கவேண்டும். எந்த காலத்திலும் நான் தவறு செய்யமாட்டேன் என்ற நம்பிக்கையில் தனது பெற்றோர் தனக்கு சுதந்திரத்தை தருகிறார்கள். அந்த நம்பிக்கையை நான் ஒரு போதும் கெடுக்கமாட்டேன் என்று இருக்கவேண்டும்.

படித்த குடும்பங்களில் அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிட கூடாது என்று நினைத்து தன் குழந்தைகளுக்கும் அதிகமாக சுதந்திரத்தை கொடுக்கிறார்கள். அந்த சுதந்திரம் தான் இன்று பல பிரச்சினையை உருவாக்கிறது. 

என் அப்பா எனக்கு போன் வாங்கி கொடுக்கிறார் என்றால் வீட்டில் நான் குடும்பத்தோடு இருக்கும்பொழுது வரும் கால்கள் அனைத்தையும் என் அப்பாவின் முன்னால் நான் பேசிமுடியும் என்றால் என் அப்பா எனக்கு வாங்கிக்கொடுத்த செல்போனால் ஒரு அர்த்தம் இருக்கின்றது. அவர் சுதந்திரத்தை எனக்கு கொடுக்கிறார் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று நான் நினைத்தால் தன் அப்பாவின் நம்பிக்கையில் மண்ணை போடுகிறேன் என்று அர்த்தம்.

இன்று படித்த குடும்பங்களில் சுதந்திரம் என்று நடக்கும் கூத்தை பார்த்தால் தெரியும். நீங்களே சோதனை செய்து பார்க்கலாம். உங்களின் மகன் அல்லது மகள் அவர்களுக்கு வரும் கால்களை உங்களின் முன்னால் பேசிகிறார்களாக என்று பாருங்கள் அல்லது போன் வந்தவுடன் உங்களை விட்டுவிட்டு தனியாக சென்று பேசிகிறார்களாக என்று பாருங்கள். 

நீங்கள் தான் சுதந்திரம் கொடுத்துள்ளீர்கள் உங்களின் முன்னால் பேசவேண்டியதானே? பொதுவாக ஒருவர் அழிய தொடங்குவது இந்த இடத்தில் தான் ஆரம்பிக்கும். கிரகங்கள் அதிகமாக இப்படி தான் உங்களின் வீடுகளில் உள்ளே புகுந்து விளையாட்டை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு உங்களை இழுத்து வந்து தெருவில் விட்டு அடிக்க ஆரம்பிக்கும்.

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உங்களை சுற்றி இருக்கலாம் ஆனால் கடைசி நேரத்தில் அதாவது நாம் சீரழிந்து தெருவில் நிற்க்கும்பொழுது உங்களை பாதுகாக்க நினைக்கும் நபர்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களாக தான் இருப்பார்களே தவிர வேறு யாரும் வந்து நிற்கமாட்டார்கள்.

உங்களின் குடும்பம் தான் உங்களை பாதுகாக்கும். வெளி உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் அவ்வப்பொழுது வரும் அப்புறம் சென்றுவிடும். இதுநாள் வரை எப்படியோ இருந்துவிட்டோம் இனி நல்ல கணவனாக மற்றும் மனைவியாக நல்ல பிள்ளைகளாக குடும்பத்தை ஏமாற்றாமல் நல்ல உறவோடு வாழுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: