Followers

Wednesday, February 26, 2014

மறுபிறவி பகுதி 1


ணக்கம் ண்பர்களே!
                    புதிய தொடர் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒரு சில சிந்தனை செய்யும்பொழுது எதார்த்தமாக ஒரு சகோதரி மறுபிறவியை பற்றி எழுங்கள் என்று இன்று காலையில் எழுதியிருந்தார்கள். சரி அம்மன் விட்ட வழி என்று மறுபிறவியைப்பற்றி எழுதிவிடலாம் என்று ஆரம்பித்துவிட்டேன்.

எப்பேர்பட்ட மனிதனுக்கும் மறுபிறவி மற்றும் சென்றபிறவியைப் பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். திராவிடத்தில் இருப்பவர்களுக்கே இதனைப்பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஒரு சாதாரண மனிதனுக்கு ஆசை இருக்காதா என்ன அப்படிப்பட்ட மறுபிறவியைப் பற்றி எனக்கு தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

மறுபிறவி என்பது கிடையாது என்று ஒரு சிலர் வாதிடகூடும். அதனைப்பற்றி எல்லாம் நமக்கு தேவையில்லை. சோதிடம் என்பது முற்பிறவியில் செய்த பாவபுண்ணிய கணக்கு. அந்த கணக்கில் இருந்து இந்த வாழ்க்கை எப்படி வாழபோகிறோம் என்றும் காட்டும் அதே நேரத்தில் நாம் போய் சேருகின்ற பிறவியையும் காட்டும் ஒரு மிகசிறந்த ஒரு கைடு என்றால் அது உங்களின் ஜாதகம் தான். இந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும் கணிக்கமுடியும்.

நாம் அடுத்து எடுக்கும் பிறவியை காட்டும் சோதிடத்தில் உள்ள தகவலையும் உங்களுக்கு தரபோகிறேன். சொந்த தகவலையும் தரபோகிறேன்.ஒரு மனிதன் எத்தனையோ பிறவியை எடுத்து வந்து தான் இந்த பிறவியை அடைந்திருக்கிறான். இந்த பிறவிக்கு பிறகும் மனிதன் பிறப்பு எடுப்பான். 

பிறவி பிறவியாக எடுத்து வந்த மனிதன் கழைப்பு ஏற்பட்டு இனி பிறவி வேண்டாம என்று நினைத்து ஆன்மீக பக்கம் ஒதுங்குகிறான். ஆன்மீகபக்கம் ஒதுங்கினாலே போதும் அவன் முடிவு எல்லையை தொட்டுவிட்டான் என்று அர்த்தம். பிறவி சுற்றுபாதை முடிந்துவிட்டது என்று அர்த்தம். தனது சுயதேவைக்காக ஆன்மீகபக்கம் ஒதுக்கினாலும் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகம் வந்துவிடுகிறது.

ஆன்மீகத்தில் இருப்பவன் என்ன செய்வான் கடைசியில் உயிர்போகும்பொழுது அவன் பயத்திலேயோ அல்லது பழக்கத்திலேயோ அவன் ராம ராம என்று சொல்லிவிடுகிறான். அவன் சொல்லமுடியாவிட்டாலும் பக்கத்தில் இருப்பவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிவிடுவார்கள். அவன் கடவுளிடம் சேர்ந்துவிட்டான் என்ற அர்த்தம்.

கிராமத்தில் ஒரு பழக்கம் இருக்கும். இறப்பவர்கள் ஆத்மா உடலை விட்டு பிரியும் நேரத்தில் பாலை ஊற்றுவார்கள் அதோடு துளசியை தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றுவார்கள். இது எல்லாம் கடவுளிடம் செல்லவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே.

எப்படிபட்ட கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்கு கடைசி நேரத்தில் இந்த தண்ணீர் தான் அவனுக்கு வழிவகுக்கிறது என்பது அவனுக்கு தெரியும். கடவுள் அனைவருக்கும் கருணையை காட்டுகிறார்.

ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகம் ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறாமல் இருக்ககூடாது நிறைவேறி இருந்தால் அவனுக்கு மோட்சத்தை தரும். இதனை நான் சொல்லவில்லை பகவத்கீதை சொல்லுகிறது.

இப்படிப்பட்ட வாய்ப்பை கடவுள் கொடுத்தாலும் மனிதன் சும்மா இருக்கமாட்டான். உலகத்தை தன் வசம் கொண்டுவரவேண்டும் என்று ஆசைபட்டுவிடுவான். அந்த ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே அவனுக்கு மோட்சம் அப்படி இல்லை அவன் மறுபிறவி எடுத்தே தீரவேண்டும்.


தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

jamuna said...

sir useful information . there is no rebirth if suppose kethu is placed in 12th place in jathagam is it true sir