Followers

Saturday, February 1, 2014

அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    பழைய பதிவுகளில் நிறைய உபநிடங்கள் மற்றும் பகவத்கீதை எல்லாம் சொல்லி எழுதிவந்தேன். அதோடு பல புத்தங்களில் உள்ள கருத்தை சொல்லி எழுதினேன். எனக்கு பல பேர்களிடம் இருந்து இதனைப்பற்றி எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு நல்ல ஞானம் இருக்கின்றது என்று சொன்னார்கள்.

ஒரு நாள் குரு வந்து பார்த்துவிட்டு உன்னுடைய பதிவில் இராமாயணம் பேசுகிறது பகவத்கீதை பேசுகிறது இன்னும் பல புத்தகங்கள் பேசுகின்றன ஆனால் உன்னுடைய அனுபவம் பேசவில்லை என்று சொன்னார். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. 

எல்லாவற்றையும் சொல்லுகிறோம் நாம் என்ன சொல்லுகிறோம் என்பதை சொல்லவே இல்லை என்று நினைத்துக்கொண்டு அன்று முதல் எனது சொந்த அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதுகிறேன். எனக்கு அனுபவமாக இருக்கும் சில விசயங்கள் உங்களுக்கு அனுபவமாக இருக்காது.

இனிப்பு என்பதை என்ன தான் நாம் சொன்னாலும் அதனை சாப்பிட்டவர்களுக்கு தான் அதன் சுவை தெரியும். அதுபோல் நான் என்ன தான் ஆன்மீகம் மற்றும் சோதிடத்தைப்பற்றி எழுதினாலும் அதில் நீங்கள் செல்லும்பொழுது மட்டுமே அதன் அருமையை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஜாதககதம்பத்தில் வரும் அனைத்தும் சொந்த அனுபவம். அந்த அனுபவம் ஒருவருக்கு நடந்திருக்கும்பொழுது உங்களுக்கும் நடைபெறும் என்று எண்ணிக்கொண்டு நீங்கள் செய்தால் அந்த அனுபவம் தான் தெய்வீகம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

shanthi shri said...

சார் வணக்கம்.
நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் உரிய படங்கள் மிக மிக பிரமாதமாய் உள்ளது. கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்.நேரிலே நின்று தரிசிப்பது போல் உள்ளது. நீங்கள் சொன்னதுபோல்(அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள் என்பீர்களே) அம்மன் படங்களை பார்க்கும் போது 1நிமிடம் கண்ணை மூடி வேண்டத்தோன்றுகிறது. வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் பதிவை படிக்கும்போதெல்லாம்.உங்களை என்றாவது அம்மன் நேரில் சந்திக்க வைப்பார் என நம்புகிறேன்.