Followers

Sunday, February 9, 2014

ஜாதகத்தின் அவசியம்



வணக்கம் நண்பர்களே!
                    நீங்கள் எந்த ஒரு வேண்டுதல் வைக்க ஒரு அம்மனிடம் அல்லது எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகத்தால் பிரச்சினை வருகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள் அந்த கிரகத்திற்க்கு முதலில் நீங்கள் சாந்தப்படுத்தும் வேலையில் இறங்கிய பிறகு நீங்கள் அம்மனிடம் அல்லது நீங்கள் செல்லும் கோவிலில் வேண்டுதலை வையுங்கள்.

கடவுளை விட கிரகங்கள் பெரியதா என்று கேட்க தோன்றும். கிரகங்களை படைத்து இப்படி தான் இயங்கவேண்டும் என்று இறைவன் விதியை ஏற்படுத்தி வைத்துள்ளான். கிரகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கும். அதற்கு நீங்கள் ஏதாவது சாந்தப்படுத்திவிட்டு தான் அடுத்ததாக கடவுளிடம் செல்லவேண்டும்.

என்னிடம் பல பேர் அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள் என்று கேட்பார்கள் நானும் வேண்டுதலை வைப்பேன். கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது. கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஜாதகத்தை எடுத்து அதில் உள்ள பிரச்சினையை பார்க்கவேண்டும். அதனை எப்படி தீர்ப்பது என்று பார்க்கவேண்டும்.

என்னிடம் பிரச்சினை என்று வருபவர்களுக்கு நான் ஜாதகத்தை தான் முதலில் பார்ப்பேன். ஏன் ஜாதகத்தை பார்க்கவேண்டும். வேதத்தில் ஒரு அங்கம் சோதிடம். என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை காட்டும் ஒரு வழிகாட்டி ஜாதகம். ஜாதகத்தை பார்த்துவிட்டு செய்ய ஆரம்பிப்பேன்.

நான் பிரச்சினைக்குரிய ஜாதகத்தை வைத்து தனியாக அதற்கு என்று வேலை செய்தால் தான் காரியம் வெற்றி பெறும் இல்லை காரியம் தோல்வி அடையும். மக்களின் மனநிலையைப்பற்றி நன்றாக நமக்கு தெரியும். நாம் என்ன தான் செய்து கொடுத்தாலும் ஆமாம் இவன் என்ன செய்தான் நமக்கு நேரம் இப்பொழுது நல்லா இருக்கிறது காரியம் வெற்றி அடைந்தது என்பார்கள். ஜாதகத்தை என்னிடம் காட்டாமல் வெற்றி என்பது கிடையாது.

ஜாதகம் என்பது சிறந்த வழிகாட்டி. நீங்கள் செய்துக்கொடுத்தாலும் முதலில் உங்களிடம் வருபவர்களிடம் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு முதலில் நீங்கள் உங்களின் சுயமுயற்சியில் ஈடுபட்டு பார்த்தீர்களா என்று கேளுங்கள். அவர்களின் வேண்டுதலில் சில காரியங்கள் வெற்றி பெறும். அந்த வேண்டுதலில் செய்யமுடியவில்லை என்றால் மட்டும் நீங்கள் இறங்கவேண்டும். கண்டிப்பாக சொல்லிவிடுங்கள் நான் செய்தால் தான் நீ வெற்றி பெறுவாய் என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் செயலில் இறங்கி வெற்றி வாய்ப்பை பெற்று கொடுங்கள். 

இதனை நீங்கள் செய்யாமல் ஒரு நாளும் காரியம் வெற்றி பெறாது என்பதை ஏற்படுத்தவேண்டும். என்னிடம் வரும் வாடிக்கையாளர்களை சோதனை என்பது செய்யாமல் ஏதும் செய்வதில்லை. மக்கள் அப்படி இருக்கின்றார்கள் எதற்கு எடுத்தாலும் தத்துவமாக பேசுவார்கள் அந்த காரணத்தால் இப்படி செய்வது உண்டு. நாம் செய்தால் மட்டுமே காரியம் வெற்றி பெறும். ஜாதகம் இல்லாமல் நம்மால் வெற்றி என்பது கொடுப்பது கடினம். ஒருத்தருக்கு நிரந்தர தீர்வை தரவேண்டும் என்றால் அவர்களின் ஜாதகத்தை வைத்து நாம் செய்துக்கொடுப்பது மட்டுமே அவர்களுக்கு நிரந்தர தீர்வை தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: