Followers

Thursday, February 27, 2014

தேர்வு நேரம்


ணக்கம் ண்பர்களே!
                    தற்பொழுது உங்களின் குழந்தைகளுக்கு தேர்வு நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதால் அவர்களை தொந்தரவு செய்யும் விதமாக நீங்கள் நடந்துக்கொள்ளாதீர்கள். வீட்டில் டிவியை ஆன் செய்து நாடகம் பார்த்துக்கொண்டிருப்பது அல்லது வேறு நிகழ்ச்சி பார்ப்பதை தவிர்க்கவும். அதோடு இலலாமல் இப்பொழுது எல்லாம் செல்போன் தான் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிறது செல்போன் வைத்தக்கொண்டு பேசிக்கொண்டிருப்பது அல்லது அதில் ஏதாவது வேலை செய்துக்கொண்டிருப்பது இது தான் அதிகநேரம் செய்துக்கொண்டிருப்பீர்கள்.

உங்களின் குழந்தைகளுக்கு அருகாமையில் இருந்துக்கொண்டு செல்போனில் பேசகூட செய்யாதீர்கள். அவர்கள் கவனிக்காது பாேல் இருப்பார்கள் ஆனால் உங்களை அவர்கள் கவனித்துக்கொண்டு தான் இருப்பார்கள். முற்றிலும் தவிர்ப்பது நல்லது

உங்களின் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள். தொந்தரவை தரும் உணவை தவிர்க்க பாருங்கள். தேர்வு நேரத்தில் உடல்நிலை பிரச்சினை தந்தால் அவர்களின் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படும். அதனால் உணவு விசயத்தில் கட்டுபாடு தேவை.

உங்களின் குழந்தைகளை அடிக்கடி கோவிலுக்கு கூட்டி சென்று வழிபட்டு வாருங்கள். உள்ளூரில் உள்ள கோவிலாக அது இருக்கட்டும். தன்னம்பிக்கை தருவது போல் பேசுங்கள். தோல்வி பயத்தை நீங்களே உருவாக்கிவிடாதீர்கள். உங்களின் வாழ்க்கையின் அர்த்தம் உங்களின் குழந்தைகளுக்கு ஒரு நல்லவாழ்க்கையை ஏற்படுத்தி தருவது தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.நமது அம்மனிடமும் பிராத்தனையை வையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: