Followers

Monday, February 3, 2014

சோதிடமும் உழைப்பு


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு முறை தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் சென்னை வருவதற்க்காக காத்திருந்தேன். என்னோடு சேர்ந்து மூன்று பேர்கள் அமர்ந்திருந்தினர் அதில் ஒருவர் என்னோடு பேச்சு கொடுத்தார். அப்பொழுது என்னோடு அமர்ந்திருந்தவர் என்னிடம் என்ன தொழில் செய்கின்றீர்கள் என்று கேட்டார். அவரிடம் நான் சோதிடத்தொழில் செய்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். இன்னோருவர் எப்படி தொழில் செல்லுகிறது என்று கேட்டார். 

நான் சொல்லுவதற்கு முன்பே அடுத்த ஒருவர் அவர்களுக்கு என்ன நன்றாக தான் செல்லும் என்றார். மக்களின் மனநிலை எப்படி என்றால் ஆன்மீகசம்பந்தப்பட்ட தொழில் எல்லாம் நன்றாக செல்லும் என்று இருக்கின்றது. அவர்களை நாம் என்ன சொல்லுவது. 

சோதிடத்தை தொழிலாக கொண்டவர்கள் எல்லாம் நன்றாகவா வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் நன்றாக வாழலாம். பொதுவாக அனைவரும் நன்றாக இருக்கின்றனர் என்று பார்ப்பது  தவறு.

இரயிலில் 2AC யில் டிராவல் செய்யும்பொழுது ஒரு சிலர் பேசிவார்கள். இதில் அதிகம் பேசமாட்டார்கள். எப்பொழுதாவது பேசுவார்கள். அப்பொழுது என்னிடம் கேட்பார்கள் நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள் என்று கேட்பார்கள். நான் சோதிடத்தொழில் செய்கிறேன் என்று சொல்லுவேன். அப்பொழுது எப்படி அதில் வருமானம் வருகிறதா என்பார்கள். வருமானம் வருவதால் தான் 2 AC யில் டிராவல் செய்கிறேன் என்பேன்.ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

நான் எப்பொழுதும் சோதிடத்தொழில் செய்கிறேன் என்று சொல்லுவதை பெருமையாக தான் நினைப்பேன். ஏன் என்றால் இந்த தொழில் எனது ஆத்மாவின் திருப்தி அதனால் செய்கிறேன். அந்த தொழிலை வெளியில் ஒப்புக்கொள்வதற்க்கு நான் தயங்கியது கிடையாது.  ஒரு சிலர் இந்த தொழிலை சொல்லுவதற்க்கு தயங்குவார்கள் ஆனால் நான் தைரியமாக சொல்லுவேன்.சோதிடத்தொழிலில் ஜெயிப்பதும் ஒன்றும் எளிது அல்ல. மிகப்பெரிய அளவில் கஷ்டப்படவேண்டும் அப்பொழுது தான் ஜெயிக்கமுடியும். உழைப்பு இருந்தால் சோதிடத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

கட்டத்தை வைத்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்று நினைக்ககூடாது அந்த கட்டத்தை பார்க்க எத்தனை வருடங்களை இழந்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். இழந்த வருடத்திற்க்கு தான் பணம். கடுமையாக உழைத்தால் சோதிடத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear sir
Thanks for tell about the hard work in this field.
Is palmistry is true?
Please just explain sir?
Thanks
Antony