Followers

Tuesday, February 4, 2014

பித்ருதோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    பித்ருதோஷத்தைப்பற்றி நண்பர் ஒரு கேள்வி கேட்டார். சார் நீங்கள் மூன்றாவது வீட்டைப்பற்றி சொல்லி அதில் ராகு கேது இருந்தால் அது பித்ரு தோஷம் என்கிறீர்கள். நான் ஐந்தில் நின்றால் தான் பித்ரு தோஷம் என்று நினைத்திருந்தேன். அதனைப்பற்றி சொல்லுங்கள் என்றார். 

மூன்றாவது வீட்டில் ராகு அல்லது கேது நின்று இருந்தால் அதுவும் பித்ரு தோஷம் தான். மூன்றாவது வீட்டில் இருக்கும்பொழுது எப்படி பாதிப்பை தரும் என்றால் சம்பந்தப்பட்ட நபரை அலைய வைத்து நோகடிக்கும். அதோடு இல்லாமல் காரியத்தை கடுமையாக தடைசெய்யும். 

பித்ரு தோஷத்திற்க்கு நிவர்த்தி அவர்கள் திதி அல்லது அது சம்பந்தப்பட்ட ஹோமம் நடத்தவேண்டும் இதற்கு அவர்களின் தாய் தந்தை இருக்ககூடாது என்பார்கள். மூன்றாவது வீட்டில் ராகு கேது அமரும்பொழுது பெரும்பாலும் பெற்றோர்களை உடனே மரணத்தை தழுவவிடாது. ஏன் என்றால் இவர்கள் தாய் தந்தையர் இறந்தால் தானே திதி செய்வாய். உன்னை விடமாட்டேன் என்று இப்படி செய்யும்.

சம்பந்தப்பட்ட ஜாதகர் கோவில் கோவிலாக அலைந்து திரிந்து அவர்கள் தெய்வபக்தியை எடுத்து அதன் வழியாக இதனை தீர்க்கவேண்டும். மிகவும் நோகடிக்க வைக்கும்.

ஐந்தில் நிற்க்கும்பொழுது தாய் தந்தையரை கொன்றுவிடும் உங்களுக்கு எளிதாக திதி செய்யமுடியும். அதுவும் பூர்வபுண்ணிய கணக்கில் இருந்து தான் வருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Dharmaraajk said...

ஒருவர் வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி பெற உபய ஜெய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் (அதுவும் குறிப்பாக ராகு அல்லது கேது) இருக்க வேண்டும் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை அன்பரே.... மேலும் காவல் தெய்வங்களுக்கு கிட வெட்டி விருந்து வைத்தால் பாவ கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் மேலும் அதனின் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்கிறார்களே... இதை பற்றி தயவு செய்து கூற முடியுமா அன்பரே.....( கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும் )