Followers

Saturday, March 15, 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். என்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் நான் சொல்லும் வார்த்தை குலதெய்வத்திற்க்கு சென்று வாருங்கள். மாதத்திற்க்கு ஒரு முறையாவது அல்லது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது  பச்சை பரப்பி வீட்டில் வழிப்படுங்கள் என்று சொல்லுவது உண்டு. இதனை படிக்கும் நீங்கள் கண்டிப்பாக செய்து வருகின்றீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் மட்டும் செய்தால் போதாது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி செய்ய சொல்லுங்கள் அவர்களும் நன்றாக வாழ்வார்கள் அல்லவா.

குலதெய்வம் கும்பிட்டால் மட்டும் போதாது உங்களின் வீட்டில் பச்சைப்பரப்பி செய்து உங்களின் குலதெய்வத்தை வீட்டிற்க்கு அழைத்துவரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் குலதெய்வத்தை ஒரு பக்கம் மட்டும் பார்ப்பது போல் செய்துவிடுகிறார்கள். ஒரு சிலர் சுயநலனுக்காக இப்படி செய்கிறார்கள். அதனால் நீங்கள் பச்சை பரப்பும்பொழுதும் மட்டும் உங்களின் பக்கம் திரும்பி வேலை செய்யும். 

ஒரு சிலர் குலதெய்வம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் அவர்களின் முன்னோர்கள் எங்கு இருந்து வந்தனர் என்று தெரிந்துக்கொண்டு அங்கு சென்று தேடிப்பார்த்தால் கண்டிப்பாக குலதெய்வம் தெரியவரும்.சம்பந்தமே இல்லாமல் செலவு செய்துக்கொண்டிருப்போம். இதற்கு என்று நீங்கள் செலவு செய்தால் என்ன கொஞ்சம் செலவு செய்து உங்களின் முன்னாேர்கள் எங்கு இருக்கின்றனர் என்று கண்டுபிடியுங்கள்.

வருடம் ஒரு முறை உங்களின் பங்காளிகள் சேர்ந்து குலதெய்வ வழிப்பாட்டை செய்வார்கள். அதில் நீங்கள் உங்களின் பங்களிப்பை கண்டிப்பாக அளியுங்கள். உங்களுக்கு முடிந்த உதவியை அதற்கு செய்யுங்கள். குடும்பத்தோடு சென்று வாருங்கள்.இதனை எல்லாம் ஒழுங்காக கடைபிடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட தோஷமும் உங்களை விட்டு செல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

antonyarun said...

Dear
What is patchai parapu?