Followers

Sunday, March 2, 2014

நாடி


ணக்கம் ண்பர்களே!
                    இன்றைக்கு பல பேர்கள் சித்தர்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளனர். சித்தர்களைப் பற்றி எழுதினால் பதிவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் கூடும் என்று நினைக்கிறேன். அந்தளவு மக்களை இன்று சித்தர்கள் தன் வசப்படுத்துக்கிறார்கள். அவர்கள் விட்டு சென்ற எத்தனையோ விசயங்களை இன்று பதிவுகளில் எழுதி தள்ளுகின்றனர். அனைவரும் ஆவலுடன் அதனை படித்தும் வருகின்றனர் என்று நினைக்கிறேன்.

இன்று பல இடங்களில் தற்கால சித்தர்கள் என்று பேரைபோட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும் குறைவு இல்லை.  அப்படி இருப்பவர்களிடம் சென்று நாடி பிடித்து நமக்கு என்ன நோய் வரும் என்று கேட்டால் அதற்கு பதில் மட்டும் வரமாட்டேன்கிறது.

என்னடா சித்தர் பக்கம் இவரும் வந்துவிட்டார் என்று நினைக்க வேண்டாம். இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பெரியவர் மிகவும் மோசமான நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரின் வீட்டில் உள்ளவர்கள் என்னை கூப்பிட்டு எப்பா இவர் இறப்பார் என்று கேட்டார்கள். சரி என்று நானும் நாடி பிடித்து பார்த்து சொன்னேன். சரி அதனை உங்களிடம் சொல்லிவிடலாம் என்று தான் இந்த பதிவு.

மருத்துவதுறையில் வந்த நோய்யுக்கு மருந்து கொடுக்கலாம். ஒரு நோயாளி எப்பொழுது இறக்கபோகிறார் என்பது மருத்துவர்களுக்கு தெரியாது ஆனால் ஒரு நாடி பார்ப்பரை கூப்பிட்டு ஒரு மனிதன் எப்பொழுது இறப்பான் என்று கேட்டால் நாடியை பிடித்து பார்த்து இந்த நிமிஷத்தில் இவர் இறப்பார் என்று துல்லியமாக சொல்லலாம்.

 அந்த பெரியவரை கையை பிடித்து பார்த்தவிட்டு இன்னும் சரியாக முக்கால் மணி நேரத்தில் உயிர் பிரியும் என்று சொன்னேன். இனி செய்யவேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்று சொன்னேன். நான் சொன்னது போல் அந்த பெரியவரின் உயிர் முக்கால் மணி நேரத்தில் பிரிந்தது.

முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது ஜீவநாடி. அவரின் கையை பிடித்து பார்க்கும்பொழுது ஜீவநாடி நின்று நின்று சென்றது. அதாவது துடிக்கும் உடனே நிறுத்திக்கொள்ளும் அவ்வாறு இருந்தால் அவர் உயிர் போகபோகிறது என்று அர்த்தம். இதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் உங்களின் குருவை அணுகி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது தமிழ்நாட்டில் சித்தர்களா இல்லை அவர்களை நாடி கேட்டுக்கொள்ளுங்கள்.

நாடி பார்ப்பதும் ஒரு உயர்ந்த கலை. நீங்களும் நாடி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: