Followers

Wednesday, March 19, 2014

குலதெய்வமும் மக்களும்



வணக்கம் நண்பர்களே!
                    நான் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு என்ன மாதிரி வழிபாடு மற்றும் கோவில்கள் இருக்கின்றன என்பதை பற்றி நான் நன்றாக பார்த்து மற்றும் தெரிந்து வைத்துக்கொள்வது வழக்கம். குலதெய்வ வழிபாடு எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பதைப்பற்றியும் தெரிந்துக்கொள்வேன்.

ஒரு ஊருக்கு செல்லும்பொழுது ஒரு விசித்திரமாக ஒன்று நடந்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். ஒரு மனிதன் எந்த குலதெய்வத்தை வணங்குகிறானோ அந்த குலதெய்வத்தின் பண்புக்கு தகுந்தவாறு அவனின் பிறப்பு மற்றும் வளர்ப்பு எல்லாம் இருக்கின்றது. இதனை பல ஊர்களில் நான் கவனித்து பார்த்து இருக்கிறேன்.

ஒரு ஊருக்கு செல்லும்பொழுது அங்கு நொண்டிவீரன் என்ற தெய்வத்தை வணங்கிவருகின்றனர் ஒரு பகுதி மக்கள். அந்த பகுதியில் அதிகமாக மக்களும் நொண்டியோடு பிறந்து இருக்கின்றனர். அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்காவது கால் ஊனமாக இருக்கின்றது. நொண்டிவீரன் தன்னைபோல் குடும்பத்தில் ஒருவராவது படைத்து அழகுபார்க்கிறான் என்பது தெரியவந்தது.

ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கு தகுந்தமாதிரி அதனை கும்பிடும் மக்களும் இருக்கின்றனர். ஒரு சில குலதெய்வங்கள் அதிக கோபமாக இருக்கும் அதனைப்போல் அந்த மக்களும் இருப்பார்கள்.நீங்களும் கவனித்து பாருங்கள். இதனைப்பற்றி தெரியவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: