Followers

Friday, March 7, 2014

குருவின் மனதும் நமது மனதும்


வணக்கம் நண்பர்களே!
                    எல்லோரும் குரு கிடைப்பார் என்று தான் நினைக்கிறார்கள். அந்த குரு கிடைப்பதற்க்கு நாம் தயார் செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. குருவைப்பற்றி ஏகாப்பட்ட பதிவை நான் கொடுத்திருக்கிறேன். அவ்வப்பொழுது எனக்குள் தோன்றும் எண்ணத்தை உங்களிடம் கொடுப்பது வழக்கம். இன்றும் குருவைப்பற்றி ஒரு எண்ணம் வந்தது அதனை உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

நமது எண்ணமும் குருவின் எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். நான் சென்னையில் இருந்துக்கொண்டு இருப்போம். குரு ஒரு இடத்தில் இருப்பார். அவர் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதைப்பற்றி நமக்கு தெரியவேண்டும். போன் போட்டு கேட்ககூடாது. நமது எண்ணத்தை வைத்தே தெரிந்துக்கொள்ளவேண்டும்.

ஒரு வேளை நமது குரு நம்மை பார்ப்பதற்க்கு நடந்து வருகிறார் என்றால் குரு நம்மை பார்க்க நடந்து வருகிறார். அவரை நாம் சென்று அழைத்துவரவேண்டும் என்ற எண்ணம் உருவாகவேண்டும். இது எல்லாம் கொஞ்சம் கடினம் தான் என்றால் நாம் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே குரு வழியாக அனைத்தும் கிடைக்கும்.

குரு ஒரு கஷ்டத்தில் இருந்தாலும் அவரின் கஷ்டம் என்ன என்று உணர்ந்துக்கொண்டு அவருக்கும் நாம் உதவி செய்யவேண்டும். பொதுவாக அனைத்து குருநாதர்களும் இதனை எல்லாம் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். இதனை உணர்ந்துக்கொண்டு நீங்கள் நடந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

வணக்கம் ஜயா,
"குரு அருள்இல்லையோல் திருஅருள் இல்லை" ஏன்பதை உணர்த்துகிறது. நன்றி