Followers

Saturday, March 15, 2014

சித்தர்கள்



வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும். மரணம் இல்லா வாழ்வு வாழவேண்டும் என்ற ஆசை தான் அது என்று சொன்னேன் அல்லவா. சித்தர்கள் மட்டும் அத்தகைய வாழ்வு வாழ்ந்தார்கள் என்று நாம் படித்து இருக்கிறோம் மற்றும் கேள்விப்பட்டு இருக்கலாம். 

ஒவ்வொரு மனிதனும் சித்தரை தேடுகின்றான் என்றால் அர்த்தம் இல்லாமல் இருக்குமா. இன்றைய கலியுகத்தில் ஒரு மனிதன் செய்யும் செயல் அனைத்தும் சுயநலனுக்காக தான் இருக்கின்றதே தவிர அது பொதுநலன் கிடையாது. அப்படிப்பட்ட மனிதன் சித்தரை பார்க்கவேண்டும் தேடவேண்டும் என்றால் கண்டிப்பாக அதிகபட்ச காரணம் மரணத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசை.

சித்தர்களை தேடுவது தவறு இல்லை ஆனால் அவர்களை சந்திப்பதின் நோக்கம் மரணத்தை வெல்லவேண்டும் என்று இருக்கும்பொழுது கண்டிப்பாக அவனுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்காது. எதுவும் இல்லாமல் எந்த நோக்கமும் இல்லாமல் நாம் தேடினால் தேடி உடன் நமக்கு கிடைப்பார்கள்.

சரி சொல்ல வந்த விசயத்திற்க்கு வருகிறேன். முதலில் சித்தர்கள் மரணத்தை வென்றார்களா என்று நாம் பார்க்கவேண்டும் அல்லவா. மரணத்தை அவர்கள் வென்றால் அவர்கள் இப்பொழுது இந்த பூமியில் இருக்கவேண்டும் அல்லவா. அவர்கள் எங்கு இருக்கின்றனர் அல்லது அவர்கள் சொன்னது பொய்யா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் சித்தர்களின் வாரிசு என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். சித்தர்கள் இப்பொழுது என்ன செய்கின்றனர் அல்லது எப்படி இருக்கின்றனர். அவர்களைப்பற்றி தகவலை எனக்கு சொல்லுங்கள். தொடர்ந்து பார்க்கலாம் அல்லது இத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: