Followers

Saturday, March 29, 2014

அம்மன் தரிசனம்



ணக்கம் ண்பர்களே!
                    காலையிலேயே எழுந்து சென்று பாண்டிச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து பெரும்பாக்கம் சென்று திருவக்கரையை அடைந்தேன். அம்மனை நன்றாக தரிசனம் செய்தேன். அம்மனே என்னை ஈன்ற அன்னையே என்று சரணாகதி அடைந்தேன். நான் அங்கு செல்வது  பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அம்மனை பார்த்தால் மனதிற்க்கு அமைதி கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு அம்மன் என்னை வரவழைப்பதே ஒருவித நல்ல காரியங்களை செய்வதற்க்கு என்று நான் நினைத்துக்கொள்வேன். அம்மன் கோவிலில் வேலை செய்யும் அதாவது சுத்தம் செய்யும் பெண்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு மாத வருமானம் குறைவாக தருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த பணஉதவியை கொடுக்கிறேன். நான் கொடுக்கிறேன் என்று சொல்லுவதைவிட நீங்கள் அனுப்பும் பணத்தில் இருந்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுவது நல்லது.

எப்பொழுதும் இதனை செய்துவருகிறேன். இதனை பதிவில் சொல்லாமல் இருந்து வந்தேன். தற்பொழுது அதற்க்கான நேரம் வந்ததால் சொல்லிவிட்டேன். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு பண உதவியை செய்து உண்டு.

திருநங்கைகளைப்பற்றி தனிப்பதிவாகவே போடவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இதிலேயே சொல்லிவிடுகிறேன். எனது பாவத்தை முன்ஜென்ம கர்மாவை எடுத்தது குருவாக இருந்தாலும் பாதி இவர்களை தான் சேரும். சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருந்து வந்தது என்பதை சொல்லவேண்டும். திருநங்கைகளுக்கு உதவி செய்வது அவர்கள் கேட்க நினைக்கும் பணத்தை விட அதிக பண உதவியை நான் செய்வேன். இந்த கோவிலுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வருவார்கள். அவர்களுக்கு பண உதவியை செய்வது உண்டு.

வடமாநிலத்தவர்கள் திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். நம் ஆட்களுக்கு இதனை எல்லாம் செய்வதற்க்கு நேரம் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர்களை பார்த்தால் என்னால் முடிந்த அதிகப்பட்ச உதவியை செய்வது உண்டு.

நான் ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதற்க்கு காரணம் இவர்களுக்கும் ஒரு சதவீதம் சாரும் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏன் என்றால் இவர்களின் ஆசீர்வாதம் இருந்தால் நம்மால் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியையும் எதிர்த்து நின்று வெற்றி பெறமுடியும். 

இதனை எல்லாம் ஏன் பெருமையாக சொல்லுகிறேன் என்று நினைக்கலாம். இதுவரை நீங்கள் அனுப்பிய பணத்தை எல்லாம் நல்லவழியில் கொண்டு சென்று இருக்கிறேன் என்பதை காட்டுவதற்க்கும் அதே நேரத்தில் வேறு ஒன்றைச்சொல்லிக்கொள்ளவும். நம் பணத்தை எடுத்து ஒருத்தருக்கு தானமாக கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டார்கள் என்றால் அது தான் நாம் செய்த பெரிய பாக்கியம். நமது கர்மத்தை வாங்குவதற்க்கு ஒருவரை கடவுள் காட்டி இருக்கிறானே என்று கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

திருவக்கரை அம்மனின் கோவிலில் இப்படி மாதம் மாதம் நான் செல்லும்பொழுது செய்வது உண்டு.

உங்களுக்காக ஒன்றை சொல்லுகிறேன். திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள். அவர்கள் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் அவர்களுக்கு ஒரு நாள் தேவைக்கு அதிகமாக பணத்தை சேர்க்கமாட்டார்கள். உங்களின் குழந்தைகளிடம் பணத்தை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அதே நேரத்தில் கோவிலில் வேலை செய்யும் சுத்தம் செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இதனை எல்லாம் நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும்.

நமது புண்ணிய கணக்கை பொருத்து தான் கடவுள் சக்தி வருவது எல்லாம் நடக்கும் நண்பர்களே. நான் இப்படி ஏகாப்பட்டதை செய்து இருக்கிறேன். அதனை எல்லாம் உங்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன். நீங்களும் இதனை எல்லாம் செய்யும்பொழுது உங்களின் குடும்பம் சிறக்கும் அடுத்த ஜென்மமும் சிறக்கும்.
 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: