Followers

Tuesday, April 22, 2014

விரைய தசா பகுதி 2


ணக்கம் ண்பர்களே!
                    இந்த உலகமே இயங்குவது ஒரு வித கணிதத்தால் தான். கணிதம் என்பது மிகவும் முக்கியமானது. கணித்தால் மட்டுமே பலன் சொல்லமுடியும். கணக்கு வைத்தால் மட்டுமே உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

இந்த வருடத்தில் தொடங்கத்தில் உங்களை எல்லாம் வீட்டில் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லிருந்தேன். எத்தனை பேர் கணக்கை தொடங்குனீர்கள் என்று தெரியவில்லை. உங்களின் வரவு மற்றும் செலவுகளை கணக்கு பார்த்தால் மட்டுமே உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.

வாழ்க்கைக்கு கணக்கு பார்க்கவேண்டும். தர்மத்திற்க்கு கணக்கு பார்க்ககூடாது. நம்ம ஆட்கள் வாழ்க்கைக்கு கணக்கு பார்ப்பதில்லை. தர்மத்திற்க்கு கணக்கு பார்ப்பார்கள். இன்றைக்கு ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் தர்மம் செய்தேன் என்று எழுதி வைப்பார்கள். வீட்டில் ஆயிரம் ரூபாய் வீணாக செலவு செய்து இருப்பார்கள். தர்மத்தை என்றைக்கும் கணக்கில் சேர்க்காதீர்கள்.

கீழே வரும் செய்தி என்னுடன் தொழில் வழியாக ஆன்மீகத்திற்க்கு வருபவர்களுக்கு சொல்லுவதை உங்களிடம் சொல்லுகிறேன். தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

இந்த உலகத்தை ஆளவேண்டும் என்றால் உங்களுக்கு கணக்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்த உலகத்தை வென்றவர்கள். உலகத்தை தன் கையில் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொதுவாக கணித பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தவர்களாக இருப்பார்கள்.

உன் வாழ்நாள் முழுவதும் வேலையில் இருந்து சம்பாதித்தால் எவ்வளவு சம்பாதிப்பாய் என்று கணக்கு போட்டு பாருங்கள். அதே நேரத்தில் அதனை விட்டுவிட்டு ஒரு தொழிலை தொடங்கினால் எவ்வளவு சம்பாதிப்பாய் என்று கணக்கு போட்டு பாருங்கள். இந்த கணக்கை பாேட்டு பார்த்துவிட்டு எதனை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பெரும்பாலான தமிழனின் எண்ணம் என்னவாக இருக்கும் என்றால் வேலைக்கு சென்று சம்பாதித்தால் போதும் என்றே சொல்லுவார்கள். ஏன் இப்படி சொல்லுவார்கள் என்றால் இவர்கள் கணக்கு போட்டு பார்ப்பதில்லை. ஏதோ மாதச்சம்பளம் வந்தால் போதும் என்றே இருந்துவிடுவார்கள். 

கணக்கு போட தெரிந்து இருந்தால் ஒரே வேலையில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள். கணக்கு தெரிந்து இருந்தால் அதேப்போல் ஒரு கம்பெனியை உருவாக்கவேண்டும் என்று சென்றுவிடுவார்கள்.

கணக்கு தெரிந்தவர்களிடம் நாம் பழகுவதே கொஞ்சம் ஜாக்கிரதையாக பழகவேண்டும். இல்லை என்றால் நம்மை காலிசெய்துவிடுவார்கள். உதாரணத்திற்க்கு ஒன்றைச்சொல்லுகிறேன். ஹிட்லரை பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு சர்வாதிக்காரி என்று சொல்லிவிடுவீர்கள் ஆனால் அவர் ஒரு சிறந்த கணிதவியலார் என்பது யாருக்கும் தெரிந்து இருக்கவாய்ப்பு இல்லை. 

ஹிட்லரை சந்திக்க ஒரு நபர் வந்து இருக்கிறார் என்று ஹிட்லரின் பாதுகாவலர் சொல்லி இருக்கிறார். ஹிட்லரும் வரச்சொல் என்று சொல்லிவிட்டு அவர் யார் என்று கேட்டுருகிறார். அவர் ஒரு கணிதவியலார் என்று பாதுகாவலர் சொல்லிருக்கிறார். உடனே அவரை உள்ளே விடாதே என்று சொல்லிவிட்டார். ஏன் என்றால் கணிதம் தெரிந்தவன் என்ன செய்வான் என்று அவருக்கு நன்றாக தெரியும்.

யூதர்களை ஹிட்லர் அழிப்பதற்க்கும் காரணம் யூதர்கள் மிகச்சிறந்த கணிதவியலார்கள். இவர்களை விட்டால் உலகத்தையே காலிச்செய்வார்கள் என்று தான் அவர்களை அழித்தார்.இன்றைக்கு யூதர்கள் தான் உலகத்தை பிடிக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

நீங்க எப்படி இருக்கின்றீர்க்ள் என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும்.கணக்கு தெரிந்தவனுக்கு விரைய தசா எல்லாம் வேலை செய்யவே செய்யாது. கணக்கு தெரியாதவனுக்கு விரைய தசா அருமையாக வேலை செய்யும்.

யூதர்கள் கணக்கு போடுவார்கள்,. மார்வாடிகள் கணக்கு போடுவார்கள், செட்டியார்கள் கணக்கு போடுவார்கள். இவர்களிடம் தா்ன இன்று பணம் இருக்கிறது. மற்றவர்கள் அனைவரம் அவர்களுக்காக வேலை செய்பவர்களாக இருக்கிறோம் என்பது நம்பமுடியாத ஒரு உண்மை. இவர்கள் தர்மத்திற்க்கு கணக்கு வைக்கமாட்டார்கள். தொழிலுக்கு கணக்கு வைப்பார்கள். நம்ம ஆட்கள் தர்மத்திற்க்கு கணக்கு வைப்பார்கள். தொழிலுக்கு வைக்கமாட்டார்கள்.

நண்பர்களே கோபப்படாதீர்கள் அடுத்த பதிவில் இருந்து சோதிட தகவலை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

BALA said...

Truth,Truth nothing but truth.But starting something is also required capital. For the past 5 years ,I have come across so many persons doing business have closed their shops . I have come across a astrologer pointing out that all cannot thrive in the business and it should have support form the horoscope and family.

தமிழ்செல்வன் said...

Hello Sir,
Starting with good message...
Good... after long time i came to our blog... starting good..

nallur parames said...

Unmai than sir