Followers

Tuesday, April 1, 2014

பச்சை பரப்புதல் விளக்கம்



ணக்கம் ண்பர்களே!
                   குலதெய்வத்திற்க்கு என்று பச்சை பரப்புதல் பற்றி பல பதிவுகளில் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் இதனை செய்துவருகின்றனர். நல்ல விசயம் அதே நேரத்தில் ஒவ்வொரு சந்தேகத்திற்க்கும் என்னையே தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பது நல்லதல்ல.

உங்களின் குலதெய்வ வழக்கத்தைப்பற்றி எனக்கு தெரியாது. பொதுவான ஒரு காரியத்தில் உங்களின் வழக்கத்தை இதில் ஈடுபடுத்தி செய்ய சொல்லுகிறேன். உங்களின் வழக்கம் என்ன என்று என்னிடம் கேட்டால் உங்களின் குடும்பத்தை பற்றி எனக்கு எப்படி தெரியும்.

பச்சைப்பரப்புதல் ஒரு பொதுவான ஒரு வழிபாடு. அதில் உங்களின் குடும்பத்திற்க்கு என்று ஒரு பழக்கம் இருக்கும் அந்த பழகத்தை நீங்கள் செய்தால் உங்களின் குலதெய்வம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நீங்கள் கேட்ட வரத்தை தரும்.

குலதெய்வம் என்று வந்தவுடன் உங்களின் குடும்பத்திற்க்கு என்று தனிப்பட்ட தெய்வம் என்று வந்துவிடுகிறது அல்லவா. உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் பழக்க வழக்கம் என்ன என்பது உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. உங்களின் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து பேசி செய்துக்கொள்ளுங்கள்.

எந்த நாளில் செய்யலாம் என்று ஒரு சிலர் கேட்கின்றனர். உங்களின் குலதெய்வத்திற்க்கு ஏற்ற நாள் எந்த நாள் என்று பார்த்து அந்த நாளில் செய்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் செய்யவேண்டும்.

பச்சைபரப்புதல் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் செய்ய சொல்லுங்கள். நீங்களும் வாழவேண்டும் பிறரும் வாழவேண்டும் என்று நினைத்து செய்யசொல்லுங்கள். இது எல்லாம் உங்களின் புண்ணியகணக்கில் சேரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

5 comments:

nallur parames said...

Arumai sir

antonyarun said...

Dear sir
Is Sridi Saibaba is kuladaivam?
Thanks
Antony

suresh said...

Dear Sir,

I Felt to be a very happy of this information, My Kula Theivam is Sri Maha Kala Bhairavar....

suresh said...

ஐயா,

மிக்க நன்றி நல்ல பயன் உள்ள தகவல் என்னுடைய குலதெய்வம் ஸ்ரீ மகா கால பைரவர்

நன்றி

suresh said...

நன்றி