Followers

Friday, April 18, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் என்னிடம் அம்மன் என்று எழுதுகிறீர்கள் அந்த அம்மனை பார்த்து இருக்கிறீர்களா அது எப்படி இருக்கும் என்று கேட்பார்கள். அதற்கு நான் சொல்லுவது அதனைப்பற்றி என்னால் சொல்லமுடியாது என்பேன்.

அம்மனை நாம் பார்க்கவேண்டும் என்றால் கடும் தவம் செய்யவேண்டும் அப்பொழுது அந்த தவத்தில் அம்மன் தன்னை காட்டிக்கொள்ளும். அது எப்படி இருக்கிறது என்று கூட நாம் சொல்லகூடாது. ஏன் என்றால் ஒரு விசயம் வெளியில் தெரிந்தால் அது இது தானே என்று சொல்லிவிட்டு சென்றுவிடும் மனிதர்களின் மத்தியில் அம்மனைப்பற்றி எதுவும் சொல்லுவதில்லை.

ஒரு ஆன்மீகவாதி என்பவர் தனக்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் சொன்னால் அவருக்கு கிடைத்த அனைத்தும் சென்றுவிடும். நான் நிறைய விசயங்களை வெளியில் சொல்லி இருக்கிறேன். அது குரு ஒருவர் இருக்கிறார் அல்லவா. அவரின் வழியாக சென்றதை பிடித்துவிடலாம். குரு இல்லாமல் பயிற்சி செய்பவர்களுக்கு கிடைத்தது அனைத்தும் பொக்கிஷம் என்று வைத்துக்கொண்டு இருந்துவிடவேண்டும்.

ஒரு சில நண்பர்கள் அம்மனிடம் கேட்டுச்சொல்லுங்கள் என்று கூட கேட்பார்கள். அவர்களுக்கும் நான் சொல்லுவது எந்த வித கேள்வியும் நான் கேட்பதில்லை. அதுவாகவே சொன்னால் உண்டு. மற்றபடி யாருக்காவும் எதற்க்காவும் கேட்பதில்லை. அது தான் நமக்கு அழகு.

குறி சொல்லுபவர்கள் கேட்கிறார்களே என்று மட்டும் கேட்காதீர்கள். அது எல்லாம் எப்படி என்பதை நான் சொன்னால் பிரச்சினை தான் வரும். சரி இன்று அம்மனுக்கு உகந்த நாள் அல்லவா. அம்மனை தரிசனம் செய்துவிட்டீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.