Followers

Saturday, April 5, 2014

ஆன்மீகமும் சோதிடமும்


ணக்கம் ண்பர்களே!
                    நமது பதிவுக்கு வரும் புதிய நண்பர்கள் நமது பதிவை அனைத்தையும் படித்துவிட்டு என்னை தொடர்புக்கொள்வது நல்லது. சோதிட பதிவை தருவது நான் சோதிடன் என்பதற்க்காக தான் தந்துக்கொண்டிருக்கிறேன். ஆன்மீக பதிவு என்பது எனது தாகம். அதனை தீர்த்தவிதம் அதன் வழியாக உங்களை ஆன்மீகவழியில் முன்னேற்றம் அடைய உதவும் என்பதற்க்காக ஆன்மீக பதிவுகளை தருகிறேன்.

சோதிடம் என்பது ஒரு எல்லை வரை தான் இருக்கும் அதற்க்கு மேல் ஆன்மீகம் வேலை செய்யும். ஆன்மீகத்திற்க்கு வருபவர்கள் சோதிடத்தை படித்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்ககூடாது. ஆன்மீகம் வேறு சோதிடம் வேறு. சோதிடம் உங்களை ஆன்மீகத்திற்க்கு உயர்த்துவதற்க்கு ஒரு வழி மட்டுமே.

பல நண்பர்கள் நான் ஆன்மீகத்தில் சாதனை செய்யமுடியுமா என்று கேட்கிறார்கள். மனிதர்களாக பிறந்த அனைவரும் ஆன்மீகத்தில் சாதனை செய்யமுடியும். பிறந்ததின் நோக்கம் ஆன்மீகத்திற்க்குள் உங்களை கொண்டுச்செல்வதற்க்கு தான். எனக்கு வராது. வரும் என்று சோதிடத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை. 

ஒரு நல்ல குரு உங்களின் ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். உங்களை தான் பார்ப்பார். கண்களில் அந்த வெறி இருக்கிறதா என்று பார்ப்பார். இவனிடம் கொடுத்தால் இவன் வெற்றி பெறுவானா அல்லது தீயவழியில் கொண்டு செல்வான என்று கூட பார்ப்பதில்லை. ஏன் என்றால் கொடுப்பனுக்கு பறித்துக்கொள்ள தெரியும்.

சக்தியை கொடுத்து பார்ப்பார்கள் நீங்கள் சரியாக பயன்படுத்தினால் உங்களை உயர்த்துவார்கள். இல்லை என்றால் எடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். பல பேர் குரு கிடைப்பார்களா என்று கேட்கிறார்கள். உண்மையில் குரு கிடைப்பார்கள். நாம் அதற்கு தயாராக இருப்பதில்லை.

ஆன்மீகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நமக்கு அந்த தாகம் இருக்கின்றதா என்று பார்த்துக்கொண்டு நாம் தேடிச்சென்றால் கண்டிப்பாக கற்றுக்கொடுப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Enakkum jodhidathil aarvam erppattu pinpu aanmeegathil aarvam erppattuladhu iyya.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி