Followers

Wednesday, May 14, 2014

விரைய தசா பகுதி 12


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பிறமதத்தை சேர்ந்தவர் அவர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் எல்லாம் ஒரு மதபோதகரிடம் சென்று தன்னுடைய பிராத்தனைகளை செய்துக்கொண்டு வருவார்கள்.

அவர்களின் நண்பர்களின் வட்டாரத்தையும் இழுத்துக்கொண்டு சென்று அங்கு பிராத்தனை செய்வார். அங்கு செல்லும்பொழுது அங்கு ஒரு MLM மார்க்கெட் செய்பவர் வந்து இவரிடம் வியாபாரம் பேசியுள்ளார். நண்பரும் ஏற்றுக்கொண்டு செய்துக்கொண்டிருந்திருக்கிறார். 

அவர் பிறரை சேர்த்துவிட்டால் இவருக்கும் பணம் என்று சொல்லியுள்ளார் அதனால் இவர் பிறரை எல்லாம் சேர்த்துவிட்டு இருக்கிறார். ஒரு நாள் அந்த ஆள் ஓடிவிட்டார். இவர் மாட்டிக்கொண்டார். இவரை நம்பி பணத்தை கட்டினவர்கள் அனைவரும் இவரிடம் வந்து நின்றுவிட்டார்கள். விளைவு இவர் பணத்தை முழுவதும் கட்டுவதாக ஒப்புக்கொண்டு பணத்தை எல்லாம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

நண்பரின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். குரு தசா ஆரம்பித்து இருக்கிறது பிற மதத்தில் உள்ளவர் என்பதால் அதனைப்பற்றி கவலைப்படவில்லை குருவின் தசா இவரை பலிவாங்கிவிட்டது. இதுவரை பணத்தை பிறர்க்கு கொடுத்துமுடிக்கவில்லை. இவர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

விரைய வீட்டில் குரு இருக்கும்பொழுது நாம் எங்கு ஆன்மீகவிசயங்களுக்கு செல்லுகிறோமோ அங்கு பிரச்சினை கிளப்பிவிடுவார். நண்பர் அந்த பக்கம் இப்பொழுது தலை வைத்து கூட படுப்பதில்லை.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

vibration said...

ராஜேஷ் சுப்பு சார்

விரைய வீட்டில் குருவோடு , சனி சேர்ந்து புதன் வீட்டில் இருந்தால்