Followers

Thursday, May 22, 2014

விரைய தசா பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு முறை தமிழ்நாட்டில் தென்பகுதியில் இருக்கும் ஒரு ஊருக்கு சோதிடம் பார்க்க சென்று இருந்தேன். கிராமங்கள் நிறைந்த பகுதி. ஊர் தலைவரின் வீட்டிற்க்கு என்னை ஒரு நண்பர் அழைத்துச்சென்றார். ஊர் தலைவரின் ஜாதகத்தை பார்க்க சொன்னார். நானும் வாங்கி பார்த்தேன். 

கிராமங்கள் என்றால் ஒரு கட்டுபாட்டோடு இருக்கும். சம்பந்தம் இல்லாமல் வெளி ஆட்கள் கூட ஊருக்குள் சென்றுவிடமுடியாது. ஒவ்வொருவரும் யாரை பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று விசாரிப்பார்கள். அதிலும் பெண்கள் விசயத்தில் அதிகமான கட்டுபாடு இருக்கும்.  இன்றைய காலத்திலும் அந்த கட்டுபாடு உள்ள கிராமங்கள் நிறைய இருக்கின்றன. 

இப்படிபட்ட கட்டுபாடு உள்ள கிராமத்தின் தலைவர் என்றால் அவருக்கு எந்தளவுக்கு மரியாதை இருக்கும். அப்படிப்பட்ட தலைவரின் விதி வித்தியாசமாக இருந்தது. ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. ஐந்தாவது வீட்டு அதிபதியோடு சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் சேர்ந்து இருந்தது. 

தலைவருக்கு ஒரு ஆண் வாரிசு ஒரு பெண் வாரிசு இருந்தது. பெண் வாரிசு மூத்த மகள். நான் அவரிடம் உங்களின் மகளின் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ளுங்கள். உங்களின் மகளுக்கு நீங்கள் திருமணத்தை உடனே நடத்திவிடுங்கள். திருமணத்தை நடத்திவிட்டால் உங்களின் மரியாதை அப்படியே இருக்கும். நடத்தவில்லை என்றால் உங்களின் மகள் வழியாக உங்களுக்கு அவமானம் வந்துவிடும் என்று சொன்னேன்.

அவர் சின்ன வயது தானே ஆகின்றது அதற்குள் எப்படி திருமணத்தை நடத்த முடியும் என்று கேட்டார். முடிந்தளவுக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லிவிட்டேன்.

நாம் சோதிடம் சொல்லும்பொழுது அந்த ஊரின் பழக்கவழக்கத்தை எல்லாம் நன்றாக கவனித்து பலன் சொல்லுவது நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அந்த ஊரின் கட்டுபாடுகள் அதாவது அந்த ஊரைப்பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களின் கட்டுபாடுகளுக்கு பிரச்சினை வராத மாதிரி நாம் முன்கூட்டியே ஆலோசனை வழங்கிவிடுவது நல்லது.

காதல் திருமணம் ஒரு புரட்சி தான். சாதி ஒழியும் என்று சொல்லிக்கொண்டு சொல்ல வேண்டிய மேட்டரை மறைத்து சொல்லிவிட்டு வந்துவிடகூடாது. புரட்சி எல்லாம் சோதிடனுக்கு தேவையில்லாத ஒன்று. உன் பிழைப்பு நன்றாக நடக்கவேண்டும் என்றால் சோதிடத்தை அப்படியே அவர்களுக்கு நல்ல ஆலோசனை தரும் விதத்தில் பலனை சொல்லிவிடவேண்டும்.

தலைவரின் பெண் ஒரு நாள் வீட்டில் வேலை செய்தவனோடு சென்றுவிட்டது. ஓடிபோய்விட்டது என்ற சொன்னால் நன்றாக இருக்கும். தலைவரின் மானத்தை வாங்கிவிட்டது. வீட்டில் வேலை செய்தவன் அந்த ஊரின் கீழ்சாதியில் உள்ள பையன்.  பிரச்சினை எப்படி இருக்கும். அந்த பெண் ஓடினாலும் அவன் தான் ஏதோ செய்து இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று சொல்லிவிடுவார்கள். 

தலைவர் சும்மா இருந்தாலும் ஊரில் உள்ளவர்கள் சும்மா இருப்பார்களாக ஊரை கூட்டி பிரச்சினையை கிளப்பி எதிர் தரப்பில் உள்ளவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்துவிட்டார்கள். 

ஆறாவது வீட்டு அதிபதி அல்லது சனிக்கிரகத்தோடு ஏழாவது வீட்டு அதிபதி சம்பந்தப்பட்டால் உங்களின் மனைவி அல்லது மகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டில் வேலைக்காரர்களை வைக்ககூடாது. தலைவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதி விரையத்தில் சென்று அமர்ந்து அதில் சனியோடு சேர்ந்து அமர்ந்தது. சனியும் வேலைக்காரர்களை குறிக்கும் கிரகம் அல்லவா. நமக்கு அவமானத்தை தரும் வீடாக விரைய வீடும் வரும். விரையாதிபதி தசாவில் அவருக்கு இப்படி நடந்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: