Followers

Wednesday, May 14, 2014

சம்பள உயர்வு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது அனைவருக்கும் சம்பள உயர்வை கம்பெனிகள் அறிவித்துக்கொண்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன். நமது நண்பர்கள் அனைவரும் இதனைப்பற்றி சொல்லி வருகின்றனர். நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல் என்னிடம் சொல்லுவது மகிழ்ச்சி அளிக்கிறது அதே நேரத்தில் அவர்கள் சொல்லும் ஒரு சில கருத்தை பார்க்கும்பொழுது எனக்கு அனுதாபமும் வருகின்றது.

சம்பள உயர்வு அவர்களுக்கு போதவில்லை என்று சொல்லுகின்றனர். அதாவது எங்களுக்கு பற்றவில்லை சார் நாங்கள் எவ்வளவு பேசியும் சம்பளம் கூடுதலாக தரமாட்டேன்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். தனியார் கம்பெனிகள் அனைத்தும் இப்படி செய்துக்கொண்டு அதிகலாபம் பார்ப்பார்கள். ஒரு சில கம்பெனிகள் கொடுக்கும் நிலையிலும் இருப்பதில்லை.

தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் கம்பெனியில் வேலை செய்பவர்களும் புலம்புகின்றார்கள். வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கூடுதல் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.நாளுக்கு நாள் விலைவாசி ஏற்றம்கொண்டே போகின்றது ஆனால் மக்களின் சம்பளம் உயரவில்லை என்பது தெரிகிறது. இது எல்லாம் நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிக்கு தெரியவேண்டும். அவர்கள் அதற்கு வழி செய்யவேண்டும்.

நான் உங்களுக்கு சொல்லும் ஒரு அறிவுரை உங்களின் தேடுதலை அதிகப்படுத்தினால் போதும். ஒரே கம்பெனியில் இருப்பதை விட பணம் எங்கு அதிகம் தருகின்றார்கள் என்பதை விசாரித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் படித்த படிப்பிற்க்கு இந்த வேலையைவிட பிற இடத்தில் நல்ல சம்பளம் தருகின்றார்கள் என்றால் நீங்கள் தாராளமாக சென்றுவிடுங்கள்.

நமக்கு ஆதாரம் வேலை என்றால் நாம் அந்த வேலையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதால் அவர்கள் சொல்லுவதற்க்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு இருக்கமுடியாது. ஆன்மீகம் என்பது வேறு ஆதாரம் என்பது வேறு. நான் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அடுத்தவர்களை எதிர்த்து கூட நமது மக்கள் பேசுவது கிடையாது என்பது தெரியவருகிறது. அப்படிப்பட்ட ஆன்மீகம் எல்லாம் தேவைகிடையாது. உங்களின் வேலையை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் போராடி தான் ஆகவேண்டும். 

தனியார் துறையில் வேலைக்கு இருந்தால் அது ஒரு நிலையில்லாத வேலை என்றே நீங்கள் மனதில் எடுத்துக்கொண்டு அது இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும் என்பதை நீங்கள் யோசித்தால் நீங்கள் எதனை பார்த்தும் அஞ்சவேண்டியதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: