Followers

Thursday, May 15, 2014

தினமும் தானம் செய்யவேண்டும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு தானத்தை செய்யவேண்டும். நீங்கள் ஒரு தானத்தை செய்துவிட்டால் உங்களின் வாழ்க்கையில் மற்றும் அடுத்த ஜென்மத்திற்க்கும் சேர்த்து ஒரு புண்ணியம் சேர்த்தது போல் ஆகிவிடும்.

நாம் கோவிலுக்கு கூட தினமும் செல்ல வேண்டியதில்லை ஆனால் தினமும் ஒரு தானத்தை செய்துவிடவேண்டும். தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும் அவசர உலகம் என்று சொல்லிக்கொண்டு நாம் தானத்தை நிறுத்திவிடகூடாது.

கையில் பணமே இல்லை என்றாலும் நாம் ஏதாவது ஒரு தானத்தை செய்வதற்க்கு வழி என்ன என்று பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட வழி ஒன்றை ஏற்கனவே சொல்லியுள்ளேன். எறும்பு புற்றுக்கு மாவை போடச்சொல்லியுள்ளேன்.

பத்து ரூபாய்க்கு கல்கண்டு பாக்கெட் வாங்கி வைத்துக்கொண்டு அதில் இருந்து சிறிய அளவில் கல்கண்டை எடுத்த எறும்பு இருக்கும் இடத்தில் போட்டால் அதனை எறும்புகள் எடுத்துக்கொள்ளும். இப்படியும் நீங்கள் தானம் செய்யலாம்.

உங்களின் வீட்டிற்க்கு வெளியில் தண்ணீர் பானை வைக்கலாம். அந்த வழியில் செல்லும் மக்கள் அதனை எடுத்து குடித்துவிட்டு செல்லுவார்கள். தண்ணீரை வெளியில் தெரியும்படி வைத்தால் மட்டுமே மக்கள் அதனை எடுப்பார்கள். பெரும்பாலும் மக்கள் தாகம் எடுத்தால் கூட உங்களின் வீட்டிற்க்கு வந்து தண்ணீர் கேட்க மாட்டார்கள். அவர்களாகவே எடுப்பது போல் தண்ணீரை வெளியில் வைத்துவிட்டால் தண்ணீரை எடுத்து குடிப்பார்கள்.

தானத்தில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒவ்வொருவரின் ஆத்மாவின் ஆசியும் பெறவேண்டும் என்று தெரிகிறது. நாம் நேரடியாக கேட்டால் அந்த ஆசியை பெறுவதற்க்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் இப்படி நாம் அவர்களின் ஆசியை பெறுகிறோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

Hi rajesh,
i have started to do the activity prior to your earlier post i have mixed rice, thuvaram paruppu, and sugar grinded in mixie so that ant can carry easily apart from that i use to keep a jug of water in compound wall crows and kuils drink that water if i forgot to keep they craw like anything till i keep the water may be the divine blessing is making me to do this and i understand the meaning of the job what i am doing after reading the article thanks for the good posts in the site

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி சார். அனைவரும் செய்யவேண்டும் என்று தான் நான் எதிர்பார்க்கிறேன். நன்றி