Followers

Saturday, May 24, 2014

அவசியமான பதிவு


ணக்கம் ண்பர்களே!
                    பல நண்பர்கள் என்மீது கோபத்தோடு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த ஒன்று. அது என்ன என்றால் வாடிக்கையாளர்களை சந்திப்பது கிடையாது. பரிகாரத்தை செய்வது கிடையாது இவர் ஏன் இப்படி திமிராக இருக்கிறார் என்று மனதிற்க்குள் நீங்கள் கேட்பதை என்னோடு நெருங்கிய நண்பர் என்னிடம் வெளிப்படுத்தியுள்ளார். 

இதனைப்பற்றி நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மேலும் புரிகின்ற மாதிரி சொல்லவேண்டும் என்று தான் இந்த பதிவை தருகிறேன். உங்களை சந்திக்ககூடாது. பரிகாரம் நான் வந்து உங்களுக்கு செய்யகூடாது என்று சொல்லுவதால் எனக்கு தான் நஷ்டம். பணம் வரவு இருக்காது என்பது எனக்கு நன்றாக தெரியும். பணத்தின் தேவையை நாம் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் உங்களுக்கு இதனை எல்லாம் செய்துக்கொண்டு இருந்தால் எத்தனை பேருக்கு செய்துக்கொண்டு இருக்கமுடியும். எத்தனை காலம் தான் செய்துக்கொண்டு இருக்கமுடியும். மாறாக உங்களுக்கு இதனை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டால் நீங்களே பல பேரை உருவாக்கிவிடுவீர்கள். ஒரு குரு என்பவர் ஒரு நல்ல குருவை தான் உருவாக்கவேண்டுமே தவிர ஒரு சிஷ்யனை உருவாக்ககூடாது என்று சொல்லுவார்கள். உங்களை நான் அடிமைப்படுத்த நினைக்கவில்லை. மாறாக உங்களுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுக்கிறேன்.

கொஞ்ச காலம் கஷ்டப்பட்டால் நீங்களே என்னைப்போல் உருவாகிவிடுவீர்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் தனி சுதந்திரமானவன். அவனை அடிமைப்படுத்தகூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். எதற்கு ஒவ்வொரு ஆன்மீகவாதிகளிடம் சென்று நீங்கள் அடிமைப்படவேண்டும். நீங்களே ஆன்மீகவாதியாக மாறிவிடமுடியும் என்ற நிலை இருக்கும்பொழுது அடுத்தவன் சொல்லுவதை கேட்டுவிட்டு அவனுக்கு ஏன் கொடிபிடிக்கவேண்டும்.

என்னை சந்திக்ககூடாது என்பதின் அர்த்தம் இது மட்டுமே. உங்களை எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக சந்திக்கிறேன். அடுத்தது உங்களின் பயிற்சியை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் அது தான் உங்களை மேம்படுத்தும்.

நான் சாகவேண்டும் என்றால் நான் தான் சாகவேண்டும் உங்களுக்காக நான் சாகமுடியாது. அதைப்போல் நீங்கள் சாகவேண்டும் என்றால் நீங்கள் தான் சாகவேண்டும். பிறர் வந்து உங்களின் சாவை ஏற்கமுடியாது. வாழும் காலம் குறைவு. பிறந்த நாளை திரும்பி பார்த்தால் இறப்பு உங்களின் முன்வந்து நிற்க்கும். என்னடா அதற்குள் இவ்வளவு காலம் சென்றுவிட்டதே என்று தோன்றும்.

இறப்பிற்க்குள் இறைவனின் சுவையை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதில் நீங்கள் விடாபிடியாக இருக்கவேண்டும். எனக்கு இந்தளவுக்கு ஆன்மீகம் வந்ததற்க்கு காரணம் நான் இளம்வயதில் ஆன்மீகபயிற்சியை தொடங்கியதால் மட்டுமே அதிக சக்தியை எடுக்கமுடிந்தது. அதேப்போல் நீங்களும் வாழ்க்கையை வீணடிக்காமல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

இளம்வயதில் அல்லது இல்லறத்தில் இருந்தால் ஆன்மீகத்திற்க்கு செல்லகூடாது என்று பல பேர் உங்களை பயமுறுத்துவார்கள் அது தவறான கருத்து. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும். உங்களின் இல்லறம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக ஆன்மீகம் தேவை. நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: