Followers

Friday, May 30, 2014

நீங்கள் கோடிஸ்வர் ஆக வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!
                    இந்த பதிவு உங்களுக்குள் மாற்றத்தை தந்தால் எனக்கு மிகப்பெரிய வெற்றி. நான் தொழில் அதிபர்களிடம் பேசும்பொழுது ஒரு சில விசயங்களை பகிர்ந்துக்கொள்வேன் அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். 

இன்றைய குடும்பங்கள் வறுமையில் சிக்குவதற்க்கு முதல் காரணம் அவர்கள் செய்யும் செலவுகள் அவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது. ஒரு குடும்பதலைவியிடம் உங்களிடம் தரும் பணத்தை என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டால் வரும் பணம் எங்களின் தேவைக்கு சரியாகவே இருக்கின்றது என்பார்கள். ஒரு லட்சத்தை கொடுத்தாலும் வரும் பணம் செலவுக்கே போதவில்லை என்பார்கள்.

ஒரு குடும்பம் நன்றாக கவனித்தால் போதும் அவர்களின் செலவை குறைக்கமுடியும். மளிகைப்பொருட்களை பற்றி முதலில் உங்களிடம் நான் சொல்லிவிடுகிறேன். இன்றைய காலத்தில் குடும்பத்திற்க்கு மளிகைப்பொருட்களுக்கு செய்யும் செலவு அதிகம். மளிகைப்பொருட்கள் அத்தியாவசியமான ஒன்று தானே அதில் எப்படி செலவை குறைக்கமுடியும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

இன்றைய காலத்தை அவசரஉலகம் என்று நாம் சொல்லிக்கொண்டு நமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். ஒரு ஐம்பது கிராம் மஞ்சள்பொடி பனிரெண்டு ரூபாய் என்று பாக்கெட் போட்டு அடைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் வாங்கி உபயோகிக்கிறோம். வெளியில் சந்தையில் நல்ல மஞ்சளை வாங்கினால் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும்.

பாக்கெட் என்று வந்தாலே அதில் கெமிக்கல் இல்லாமல் பாக்கெட் செய்யமுடியாது. நல்ல மஞ்சளை நாம் நேரிடையாக விவசாயிடமே வாங்கினால் இன்னும் குறைவாக வாங்கலாம். விவசாயிக்கும் நேரிடையாக வியாபாரம் செய்யும்பொழுது அவர்களுக்கும் ஒரு ஊக்கம் அளிப்பதுபோல் ஒரு ரூபாய் கூடுதலாக கூட கொடுத்து வாங்கலாம். இந்தியா விவசாயத்தை நம்பி தான் உள்ளது. விவசாயம் நன்றாக இருக்கும்.

வருடத்திற்க்கு ஒரு முறை நாம் இதனை வாங்கி வைத்துக்கொண்டாலே போதும். பொதுவாக மளிகைப்பொருட்கள் வருடம் முழுவதும் கெடாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியும். தஞ்சாவூரில் மிளகாய் விளையும் அதனை வாங்கி வைத்துக்கொண்டால் போதும் வருடம் முழுவதும் அதனை நான் பயன்படுத்திக்கொள்ளமுடியும் ஆனால் தஞ்சாவூரில் விளையும் மிளகாயை சென்னையில் உள்ள பிரபலமான கம்பெனி வாங்கி அதனை பாக்கெட் போட்டு எனது ஊரில் உள்ள கடையில் விற்றால் அதனை நான் வாங்கி உபயோகப்படுத்தினால் மட்டுமே எனக்கு திருப்தி அளிக்கிறது என்றால் என்னைப்போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் கிடையாது.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள பிரபல கம்பெனிகள் எல்லாம் மளிகைப்பொருட்கள் மீது கண் வைக்கிறத்திற்க்கு காரணம் இதில் அந்தளவுக்கு வருமானம் இருக்கிறது. இன்றைக்கு பெண்கள் பிக்பஷாரில் பொருட்கள் வாங்கினால் தான் பேஷன் என்று நினைக்கிறார்கள். இப்படி வாங்கினால் நீங்கள் வாங்கும சம்பளம் இந்த கம்பெனிக்கே போய்க்கொண்டிருக்கும். அப்புறம் நீங்கள் எப்படி பணக்காரர்களாக ஆகமுடியும்.

நீங்கள் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்றால் முதலில் உங்கள் குடும்பத்தை சேமிக்கவேண்டும் அதன் பிறகு நீங்கள் பணக்காரர்களாக மாறலாம்.ஒவ்வொரு குடும்பமும் இப்படி தேவையற்ற முறையில் பொருட்களை வாங்கி வீணாக செலவு செய்கிறார்கள்.மளிகைப்பொருட்கள் நேரிடையாக நீங்கள் வாங்கும்பொழுது உங்களின் உடல் பாதுகாக்கப்படுகிறது. உங்களின் பணமும் சேமிக்கப்படுகிறது.

இன்றைக்கு நான் அம்மன் ஹோமம் செய்வதாக இருந்தால் ஒரு லிட்டர் நெய் தேவைப்படுகிறது என்றால் கம்பெனி பொருட்களாக இருந்தால் அதன் விலை 530 ரூபாய் வருகிறது. அதே ஊரில் நெய் தயாரிக்கும் இடத்தில் 250 ரூபாய்க்கு கிடைக்கும். எனது நண்பர்களிடம் நீங்கள் உள்ளூரிலேயே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

நீங்கள் மளிகைப்பொருட்களுக்கு செலவு செய்யுங்கள் ஆனால் அதனை நான் சொல்லும் விதமாக வாங்கி பயன்படுத்தினால் உங்களின் பணம் தேவையில்லாமல் செலவு ஆகாது. பெண்களிடம் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அது பெண்களின் இயல்பான குணம். நான் சொல்லுவதை போல் உங்களின் மனைவிக்கு இப்படி சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் அவர்கள் அதனை கடைப்பிடிப்பார்கள். உங்களின் பணம் சேமிக்கமுடியும்.

வசதியாக வாழவேண்டும் என்பது மனிதனின் இயல்பான குணம். சேமித்து வரும்பொழுது உங்களிடம் இருக்கும் பணம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்பொழுது நீங்கள் விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்.

பணத்தை சேமித்த பிறகு ஒரு கோடிக்கு நீங்கள் கார் வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி தேவையற்ற செலவை தெரியாமல் செய்து வந்தால் தெருக்கோடியில் தான் நீங்கள் இருக்கவேண்டும்.

மளிகைப்பொருட்கள் எல்லாம் இயற்கையில் உள்ளவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழலாம்.உங்களின் பணமும் சேமிக்கமுடியும்


எனது தொழில் நண்பர்களோடு இருக்கும்பொழுது விவாதித்த கருத்து இது. பல நண்பர்களின் ஆலாேசனையும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த பதிவை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அனுப்பி அவர்களையும் பின்பற்ற சொல்லுங்கள்.

நல்ல இயற்கையான ஒரு நாட்டை செயற்கையாக மாற்றுகிறார்கள் அதனை தடுப்பதற்க்கு இந்த முயற்சியாவது நாம் செய்வோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

prabhakaran said...

True

BALA said...

Correct.Whether big shop or a small one, they have fixed the price. Previously one can purchase for yearly requirement and store. Now there is no storage space in flats. Further no body is known from where , that is manufacturing place, peasant from where one can purchase their requirements and big corporate bulk purchasing. Fearing even small kirana shops vanish and big coprorates will also vanish with FDI. Pre Independence days and we will be once again ruled by foreign people through trade fearing .Let us hope for the best for India and their people

antonyarun said...

This is nicr idea
but practically not possible.
Mostly using rice and oil almost same rate all over india.
thanks
Antony