Followers

Wednesday, May 14, 2014

அனுபவமே சோதிடம்


வணக்கம் நண்பர்களே!
                    சோதிட அனுபவத்தை படித்துவிட்டு நண்பர்கள் போன் செய்து பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி. பின்னோட்டத்திலும் பாராட்டிய நண்பர்களுக்கும் நன்றி. 

நீங்கள் சோதிடத்தை பாடமாக படிக்கிறீர்கள் நான் அதனை பிராடிக்கலாக செய்து வருகிறேன் இது தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஒரு வாடிக்கையாளரை நான் நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் விதமாக எனது சோதிட பலன்கள் இருக்கும். 

எனக்கு எப்படி இது வந்தது என்றால் நேரிடையாக பல பேரை பார்த்து பலன் சொல்லிருக்கிறேன். பல ஊர்களுக்கு சென்று பலனை சொல்லியுள்ளேன். அப்படி சென்று சோதிடம் பார்க்கும்பொழுது நல்ல அனுபவம் ஏற்படும்.

எனக்கு பார்க்க தெரிந்த கட்டம் என்றால் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் மட்டுமே தெரியும். பல கிராமங்களுக்கு சென்று பார்த்தால் அவர்கள் இந்த இரண்டு கட்டங்களை மட்டும் வைத்திருப்பார்கள். இப்பொழுது தான் கம்யூட்டர் ஜாதகம் வந்திருக்கிறது. 

பல பேர்களின் ஜாதகத்தை பார்த்தே எனக்கு சோதிடபலனை சொல்ல கற்றுக்கொண்டேன். சோதிட பலனை விட நாம் கொடுக்கும் தீர்வு தான் மிகமுக்கியமாக இருக்கும். இன்றைய நாளில் எல்லாம் இப்படி சென்று பார்ப்பது கிடையாது. அந்த நேரத்தில் மிகப்பெரிய தாகம் இருந்தது. அதனை எல்லாம் இன்று நினைத்து பார்த்தால் வெட்கமாக இருக்கும். இன்றைய நாள் வரை பல ஊர்களில் இருந்தும் எனக்கு வாடிக்கையாளர்கள் போன் செய்து எங்களின் ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிடுவார்கள்.

ஏன் இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்றால் நான் அவர்களுக்கு செய்த நன்மை நமக்கு நல்லபேரை வாங்கிக்கொடுத்து இருக்கிறது. அதோடு பரிகாரம் என்று அவர்களை போட்டு கொல்வதில்லை. மிக எளிமையாக இருக்கும். அந்த எளிமை தான் நம்மை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் சோதிடப்பாடத்தை பக்கபக்கமாக படிக்கலாம் ஆனால் அனுபவ அறிவை நீங்கள் பெற வேண்டும். அதற்கு நீங்கள் பல கிராம மக்களுக்கு சென்று சோதி்டம் பார்க்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: