Followers

Sunday, May 18, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                  
 சரண் said...
ஆஞ்சநேயரை வழிபட்டால் சந்திர பலம் குறையும் என்றால் வேறு ஒரு பவர் கூடுமே? அது எது? 

மேலும் சந்திர பலம் என்றால் மனம் பலமடைவதுதானே. அது பலம் குறைய வேண்டும் என்றால் எதற்காக என்று எனக்கு புரியவில்லை. -அல்லது நீங்கள் கூற வந்ததை நான் புரிந்துகொள்ளவில்லையா?

பொதுவாக ஜாதகபலனை சொல்லுவதற்க்காக எல்லாம் இதனை அதிகம் பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. பரிகாரம் என்று வருவர்களுக்கு நாம் செய்துக்கொடுக்கும்பொழுது நடைமுறையில் பல சிக்கல்கள் வரும். 

ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து எந்த கிரகம் பலம் அதிகம் ஆகும் மற்றும் எந்த கிரகம் பலன் குறையும் என்பதை அந்த நேரத்தில் தான் நமக்கு தெரியும். பலன் சொல்லுவது என்பது வேறு பரிகாரம் செய்துக்கொடுப்பது என்பது வேறு.

சந்திரனின் பலத்தை குறைத்து ஒரு சில வேலைகளை செய்வதற்க்காக நாங்கள் பலத்தை குறைக்கும் வேலையில் இறங்குவது உண்டு. பொதுவாக நீங்கள் கிரகங்களுக்கு எப்படி பரிகாரம் செய்யவேண்டும் என்பதை ஒரு குருவிடம் கற்றபிறகு உங்களுக்கு தெரியவரும். 

ஆன்மீகம் துணைக்கொண்டு பரிகாரத்தை செய்யும்பொழுது இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். பதிவில் சொல்லும் பரிகாரம் அவர்அவர்கள் செய்துக்கொள்ளும் பரிகாரமாக இருக்கும். நாம் பிறர்க்கு பரிகாரம் செய்யும்பொழுது அதில் நிறைய வித்தியாசம் இருக்கும்.

நிறைய விசயங்கள் வெளியில் தெரிவதில்லை. அதனை செய்வதற்க்கு என்று நாம் ஒரு குருவிடம் கற்றால் அதனைப்பற்றி சொல்லி தருவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

திருவாரூர் சரவணா said...

சந்திர பலம் - விளக்கம் புரிந்தது. நன்றி.