Followers

Saturday, May 10, 2014

பரிவர்த்தனை



ணக்கம் ண்பர்களே!
                    பரிவர்த்தனை பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். பரிவர்த்தனை யோகம் எல்லாம் உங்களுக்கு அத்துபடியாக தெரியும். பல பேர் எங்கையாவது படித்துவிட்டு அது எனக்கு வேலை செய்யவில்லையா சார் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள்.

கிரகங்களை எல்லாம் நான் வேலை செய்ய வைக்கிறேன் என்ற காரணத்தால் இப்படி என்னிடம் கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன். எந்த ஒரு கிரகமும் என்னுடைய பேச்சை கேட்டு வேலை செய்வதில்லை. அது இஷ்டத்திற்க்கு வேலை செய்துக்கொண்டு தான் இருக்கும். 

ஒரு சில கிரகங்கள் பரிவர்த்தனையில் அமர்ந்தால் அதுவே பிரச்சினையை அதிகம் கொடுத்துவிடும். அந்த பரிவர்தனையால் வாழ்வில் பெரிய அடி விழுந்துவிடும். உதாரணமாக குரு சுக்கிரன் பரிவர்த்தனை  சனி சூரியன் பரிவர்த்தனை ஆகியவை சொல்லலாம்.

பரிவர்த்தனை நடைபெறவில்லை என்றால் அந்த கிரகத்தின் தசா நடைபெறுகிறதா என்று பாருங்கள். இரு கிரகத்தில் ஒரு கிரகத்தின் தசா நடைபெற்றால் போதும் பரிவர்த்தனை நடைபெற்ற கிரகங்களின் பலனை நாம் எதிர்பார்க்கலாம்.

ஒன்றும் நடைபெறவில்லை என்றால் அந்த கிரகத்தின் அதிதேவதை என்ன என்று பார்த்து வணங்கிவாருங்கள். பரிவர்த்தனை யோகம் உங்களுக்கு நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: