Followers

Tuesday, May 13, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    செய்வினை இல்லை என்ற பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் போன் செய்து எனது குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு ஒரு வித பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர் அதன் காரணம் என்ன என்று கேட்டார். 

உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை முதலில் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள். அதன் பிறகு ஆன்மீகத்தை நாடவேண்டும். நீங்கள் மருத்துவகுடும்பம் என்பது தெரியும். மருத்துவபரிசோதனை செய்து இருப்பீர்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வழி வழியாக ஒரு பிரச்சினை என்று வந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு செய்வினை எல்லாம் வைத்திருக்கமாட்டார்கள். யாராவது ஒரு நபர் அல்லது குடும்பத்திற்க்கு செய்த பிரச்சினையால் வருகின்றது என்று அர்த்தம். இதனைப்பற்றி நான் பூர்வபுண்ணிய தொடரில் எழுதியுள்ளேன். 

உங்களின் குடும்ப உறுப்பினர்களை கூப்பிட்டு என்ன பிரச்சினை செய்தார்கள் என்று கேளுங்கள். கண்டிப்பாக யாருக்காது ஒரு சிறிய துரோகத்தையாவது செய்து இருப்பார்கள். நம்ம ஆளுங்க இவ்வளவு படித்த பிறகு கூட அவர்கள் உண்டு அவர்களின் வேலை உண்டு என்று இருப்பதில்லை. மாறாக அடுத்தவன் என்ன செய்கிறான் அவனைப்பற்றி எப்படி வெளியில் இல்லாத ஒன்றை பேசுவது மட்டும் வேலையாக வைத்திருப்பார்கள். அந்த காலத்தில் சும்மா இருந்திருப்பார்கள என்ன?

எங்காவது சென்று பிரச்சினையை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வந்து இருப்பார்கள். அந்த காலத்தில் ஒரு ஊரில் ஒரு பிரச்சினையை செய்தால் கூட அந்த ஊருக்கு தெரிவதற்க்கு வாய்ப்பு இல்லை. அப்படி இருந்த காலத்தில் எப்படி எல்லாம் பிரச்சினை மக்கள் செய்து இருப்பார்கள்.

அதனைப்பற்றி விபரம் தெரியவில்லை என்றால் தர்பணம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு அதில் காருண்ய தர்பணம் என்ற ஒன்று உண்டு. அதனை செய்து பாருங்கள். உங்களின் பிரச்சினை தீரும். கண்டிப்பாக இது செய்வினை எல்லாம் கிடையாது.

முக்கால் வாசி பிரச்சினை மனதால் வருவது மட்டுமே. சிறந்த பக்தி மார்க்கம் அல்லது தியானத்தால் உங்களின் பிரச்சினையை சரிசெய்யமுடியும். மனதை விட்டுவிட்டால் பிரச்சினை இல்லை. கவனித்தல் என்ற வழி தான் அதற்கு மிகப்பெரிய தீர்வாக அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: