Followers

Monday, May 26, 2014

கேள்வி



வணக்கம் நண்பர்களே!
                    சக்தியைப்பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் நீண்டநாட்களாக நினைத்த இருந்தேன். அதனை டைப் செய்யவேண்டும் என்று நினைப்பதற்க்கு மறந்தவிடுவேன். இன்று எப்படியாவது அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்பதற்க்காக உங்களுக்கு கொடுத்துவிட்டேன். முதலில் நாம் ஒரு கேள்வியோடு இதனை தொடங்கலாம் என்று நினைத்து உங்களிடம் கேள்வியை முன் வைக்கிறேன்.

ஆன்மீகத்தைப்பற்றி நான் கேள்வி கேட்கும்பொழுது பல விசயங்கள் என்னை நோக்கி வந்தது. அதைப்போல் சக்தி என்றால் எப்படி எல்லாம் வேலை செய்யும். உடலில் எப்படி சக்தி இருக்கின்றது அதனைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள்.

சக்தி என்றாலே ஒரு இடத்தில் நாம் அதனை பிடித்து வைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அது ஒரே இடத்திலும் நின்றவிடகூடியதும் அல்ல என்று உங்களுக்கு தெரியும் ஆனால் நான் சக்தி வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சக்தி என்பதை தேவைப்பட்டால் மட்டுமே நான் பெற்றுக்கொள்வது போல் வைத்திருக்கிறேன்.

இந்த சக்தியை பற்றி நீங்கள் சொல்லுங்கள். அதன் வழியாக உங்களுக்கு அதாவது உங்களின் ஆன்மீகமுன்னேற்றத்திற்க்கு ஒரு நல்ல வழியை சொல்லிதருகிறேன். இதனை யார் சொல்லுகின்றார்களோ அதாவது எனக்கு டைப் செய்து அனுப்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பகிர்ந்துக்கொள்வதாக எனக்கு ஒரு எண்ணம். 

சக்தி என்றால் என்ன?
சக்தியை எப்படி நமது உடல் பெறுகிறது?
சக்தியின் நிலைகள் எத்தனை?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Jeyaraman said...

சக்தி என்றால் என்ன ?

சிவம் என்றால் சூனியம் என்று பொருள்.அதன் எதிர்மறை தான் சக்தி. அதாவது எந்த ஒரு இயக்கத்திற்கும் காரணமாய் அமைவது தான் சக்தி.

சக்தியை எப்படி நமது உடல் பெறுகிறது?

பல வழிகள் இருகின்றன அவை அனைத்தும் பஞ்ச பூதங்கள் வழியாக தான்.
மேலும் அவை உடம்பின் நிலை , உறுப்புக்களுக்கு தக்கவாறு மாறுபடும் உதாரணமாக மூளை இதில் சக்தி என்பது ஞாபக சக்தியாகவும் இப்படி அதற்கு தக்கவாறு நமது உடல் பெறுகிறது


சக்தியின் நிலைகள் எத்தனை?

விவரிக்கமுடியாத அளவு உள்ளது

நன்றி

இதில் தெரிந்த வற்றை சொல்லி உள்ளேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்