Followers

Friday, May 2, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்பவர்களுக்கு என்று ஆன்மீக உதவிகளை நீங்கள் செய்து வருகின்றீர்கள் அதில் மார்வாடிகளுக்கு செய்வது போல் ஏன் அதிகம் தமிழர்களுக்கு செய்வதில்லை அதற்கு காரணம் என்ன என்று நண்பர் ஒருவர் கேட்டார்.

தமிழர்களுக்கு செய்கிறேன் மிக குறைந்தளவு உள்ள நபர்களுக்கு மட்டுமே செய்கிறேன். தமிழர்கள் என்பவர்கள் எனக்கு எதிரி கிடையாது. ஒவ்வொரு மக்களின் நம்பிக்கையை பொறுத்த விசயம்.  தமிழர்கள் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கும் கடவுள் நம்பிக்கையே குறைவாக இருக்கின்றவர்கள் ஆன்மீகவாதிகளை எப்படி நம்புவார்கள்.

நம்ம ஆட்கள் இருக்கின்றார்கள் அல்லவா அவர்களின் வேண்டுதலை பார்த்தாலே தெரியும் நேராக கோவிலுக்கு சென்று கடவுளே நீ இருந்தால் என் பக்கத்துவீட்டுக்காரன் இருக்கிறான் அல்லவா அவனை நீ கொன்றுவிடு என்று வேண்டிக்கொண்டு வருவார்கள். எப்படி என்பதை வார்த்தையில் கவனித்தால் மிகப்பெரிய தில்லாலங்கடியாக இருக்கும். கடவுளே நீ இருந்தால் இதனை படித்துப்பாருங்கள்.கடவுளே இல்லை என்ற வார்த்தையை போட்டு வேண்டுவார்கள்.

நான் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். நம்ம ஆட்கள் வேதங்கள் எல்லாம் படிப்பார்கள் அவர்களிடம் பேசிப்பார்த்தால் என்ன சொல்லுவார்கள் என்றால் என்னமோ அவர் சொல்லிக்கொடுக்கிறார் நாம் படித்துக்கொண்டு இருக்கிறேன். அது எந்தளவுக்கு வரும் என்று தெரியவில்லை என்பார்கள்.

வேதம் படிக்கிறவனே இப்படி இருக்கிறான் என்றால் சாதாரண ஆட்கள் நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை. நம்ம ஆட்கள் கோவிலுக்கு செல்வதே அடுத்தவனை அழிக்க தானே ஒழிய ஒரு நல்ல நிலைக்கு செல்லவேண்டும் என்பதில்லை. அதற்கு எல்லாம் காரணம் நாம் வளர்ந்த நிலை அப்படிப்பட்டது. 

என்னை நம்பிவருவர்களுக்கு செய்வேன். நம்பவில்லை என்றால் என்னை நம்புகிறவனை தேடிப்போய் செய்வேன். நமக்கு தொழில் நடக்கவேண்டும் அது யாராக இருந்தாலும் சரி செய்யவேண்டியது எனது வேலை.

நான் ஒரு பொதுஆள் என்னைப்பொறுத்தவரை யார் வந்தாலும் செய்து தரமுடியும். என்ன என்றால் அவர்களின் நம்பிக்கை நன்றாக இருக்கவேண்டும். அவர்களின் மனமும் நன்றாக இருக்கவேண்டும். என்னிடம் வந்து என்னையே ஏமாற்றுவதாக இருந்தால் பெரிய பிரச்சினையாகவிடும். அதனால் வரும் நபர்களை மிகவும் சோதனை செய்து செய்வது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: