Followers

Saturday, May 10, 2014

உண்மை சம்பவம்


வணக்கம் நண்பர்களே!
                     பொதுவாக நான் அதிகமாக கோவிலுக்கு செல்லுவது கிடையாது. யாராவது நண்பர்கள் என்னை கூப்பிட்டால் செல்லுவது உண்டு. நீங்கள் ஒரு குருவிடம் பயின்றால் அவர்கள் கோவிலுக்கு எல்லாம் செல்ல சொல்லமாட்டார்கள். இருந்த இடத்தில் இருந்து தரிசனம் செய்யவது எப்படி என்பதை கற்றுக்கொடுப்பார்கள்.

கோவிலுக்கு செல்வது தவறு கிடையாது. ஆன்மீகத்தில் முதல் நிலையில் இருக்கும்பொழுத கோவிலுக்கு செல்லலாம். அதன் பிறகு கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதில்லை.

நான் இதுவரை நவகிரகங்கள் இருக்கும் கோவில்களில் சூரியனார் கோவில் சுக்கிரனின் கோவில் மற்றும் ஆலங்குடி குரு கோவிலுக்கு மட்டும் சென்று இருக்கிறேன். மற்ற கோவிலுக்கு செல்லவில்லை. ஆலங்குடி கோவிலுக்கு மட்டும் அடிக்கடி சென்றது உண்டு. 

பொதுவாக கோவிலில் சாதாரண மனிதனுக்கு அங்கு மரியாதை என்பது கிடைக்காது. கோவில் நமக்கு என்ன மரியாதை என்று நீங்கள் நினைக்கலாம். முதல் முறை சூரியனார் கோவில் செல்லும்பொழுது நான் வாங்கிக்கொண்டு சென்ற தாமரை பூ மற்றும் எனது உறவினர் ஒருவர் வாங்கிக்கொண்டு சென்ற பூ எல்லாவற்றையும் வாங்கும் அர்ச்சகர்கள் அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தூக்கி வீசுகிறார்கள்.

நமக்கு மரியாதை வேண்டாம் நாம் அந்த கடவுளுக்கு மன அமைதிக்காக வாங்கிக்கொண்டு செல்லும் பூ மற்றும் பொருட்களை மனநிறைவோடு வாங்கிக்கினால் தானே நமக்கு திருப்தி கிடைக்கும். 

எத்தனையோ ஏழை மக்கள் வாங்கிக்கொண்டு செல்லும் பொருட்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிக்கொண்டு செல்வார்கள். அதனை நல்ல நிலையில் வாங்கினால் தானே அவர்களின் மனதிற்க்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். இப்படி செய்தால் எப்படி இருக்கும். எனக்கு இந்த மாதிரி நடந்தது கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு முன்பு இதனை இன்று உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

இதுவரை நான் திருநள்ளாறு சனிஸ்வர பகவானை எல்லாம் பார்த்ததே கிடையாது. ஒரு குருவை பார்த்தால் போதும் அனைத்து தெய்வமும் உங்களிடம் ஒடி வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: