Followers

Thursday, May 22, 2014

ஜாதககதம்பம் என்ற போதை


வணக்கம் நண்பர்களே!
                    பல பேருக்கு ஜாதக கதம்பம் இப்பொழுது ஒரு பாேதை போல் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். ஆன்மீகம் என்றாலே படிப்பது என்ற நிலையில் உள்ளனர். ஆன்மீகம் படித்து வருவதில்லை. படிப்பதை நிறுத்துவது மட்டுமே ஆன்மீகம். எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருப்பது மட்டுமே ஆன்மீகம்.

ஜாதககதம்பத்தை ஒருவர் ஒரு நாளில் பத்து முறை வந்து படிக்கின்றனர். இது எங்கு கொண்டுவிடும் என்றால் உங்களை பைத்தியமாக்கிவிடும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்கு பதில் பைத்தியத்தை உருவாக்குவது என்ற நிலை ஏற்பட்டால் நான் கஷ்டப்படுவது அனைத்தும் வீணாகப்போய்விடும்.

டிவி பார்ப்பது மொபைல் போனில் பேசிக்கொண்டிருப்பது எல்லாம் உங்களின் சுயஇருப்போடு இருப்பதை தவிர்க்கிறது. உங்களின் சுய இருப்போடு இருக்கும்பொழுது உங்களுக்கு ஆன்மீகம் என்ன என்றால் தெரியவரும். தினமும் ஒரு தடவை வந்து என்ன எழுதியுள்ளார் என்று பார்த்தால் போதும். ஏன் என்றால் இது ஒரு வியாதியாக மாறிவிடும். மனதை விட்டு ஆன்மீகத்திற்க்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நீங்கள் மனதோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள். 

ஜாதகதம்பத்தை எழுதும்பொழுது குரு என்னிடம் சொல்லுவார். பல பேரை கெடுத்துக்கொண்டிருக்கிறாய் அவர்கள் தன்னோடு இருப்பதற்க்கு பதில் உன்னோடு இருக்க வைக்கிறாய் என்பார். அது உண்மையான சொல். உங்களை உங்களோடு இருக்க வைக்கவேண்டும். உங்களை மேம்படுத்துவதற்க்கு தான் இதனை எழுதுகிறேன். இது தான் பிழைப்பு என்று இருக்ககூடாது. என்னை போல் ஒரு ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்றால் அனைத்தையும் விட்டுவிட்டு உங்களின் பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள்.

அம்மன் பூஜையை முடித்துவிட்டு நேற்று திருப்பூர் வந்துவிட்டேன். திருப்பூரில் இரண்டு நாட்கள் தங்க வேண்டியுள்ளது. அவ்வப்பொழுது ஒய்வு கிடைக்கும்பொழுது உங்களுக்கு பதிவை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

BALA said...

One of the reason is that whether any more blogging is there. If you could put "END" at the end of the last blogging then people like me come next day to see any thing is there .Further ,another way is to restrict the blogging per day say 5,10 like that and put an end .Since you are writing during the free time people are eagerly coming again and again