Followers

Sunday, May 18, 2014

எந்த கோவிலில் அதிக சக்தி வெளிப்படும்


வணக்கம் நண்பர்களே!
                    நாம் கோவிலுக்கு சென்று வந்தால் அந்த கோவில் வழியாக நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் நாம் செல்லும் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக இருக்கவேண்டும். ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். சாதாரண மக்களுக்கு கண்டுபிடிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். சக்தி வாய்ந்த கோவில் என்றால் எப்படி நாம் கண்டுபிடிப்பது? 

ஒரு கோவில் நல்ல சக்தியோடு விளங்குகிறது என்றால் அந்த கோவிலில் கண்டிப்பாக தலவிருட்சம் இருக்கவேண்டும். அந்த காலத்தில் வழிபாடு எல்லாம் மரங்களை வழிபட்டு வருவார்கள். ஒவ்வொரு மரத்திற்க்கும் ஒவ்வொருவிதமான சக்தி வெளிப்படும் என்று சொல்லுவார்கள்.

நமது அம்மன் இருக்கும் இடத்தில் பல மரங்கள் இருக்கின்றன. புற்று மீது மரங்கள் வளர்ந்து இருக்கின்றன. அதிகமான சக்திகளை வெளிப்படுத்துகிறது. தலவிருட்சம் என்பது மிக மிக முக்கியம்.

தலவிருட்சம் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோவிலில் கொடிமரம் இருக்கின்றதா என்று பாருங்கள். கொடிமரம் இருந்தால் அந்த கோவில் சக்தியோடு விளங்கும். ஒரு தீபம் ஏற்றினாலும் இந்த மாதிரியான கோவிலாக பார்த்து நீங்கள் ஏற்றுவதும் வணங்குவதும் செய்யவேண்டும்.

அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்பியவர்களில் பதிவில் பெயர் வராதவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: