Followers

Sunday, June 1, 2014

ஆண்கள் மட்டும் படிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு பதிவை போட்ட நேரத்தில் இருந்து பல நண்பர்களிடம் இருந்து போன் கால்கள் மற்றும் மெயில்கள் வந்தவண்ணம் இருக்கின்றது. இந்தியர்களிடம் அடக்கப்பட்ட காமஉணர்வு இருப்பது இதில் இருந்து தெரிகிறது.

ஒரு நண்பர் கேள்வியும் கேட்டுருந்தார். எந்த காரணத்திற்க்காக பெண்கள் ஆன்மீகவாதிகளை அதாவது சாமியார்களை விரும்புகிறார்கள் என்று கேள்வி கேட்டுருந்தார். காமத்திற்க்காக சாமியார்களை விரும்புகிறார்கள் அது எதனால் என்று கேட்டுருந்தார்.

எப்படி எல்லாம் கேள்வி முடியும் என்பதை தமிழனை விட்டால் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்பது இதன் மூலம் தெரிகிறது. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுமாக விரும்புகிறார்கள் யாராவது ஒரு சிலர் விரும்புவார்கள். அதுவும் காமத்திற்க்காக என்று கேட்டுவிட்டீர்கள் உங்களுக்காக இந்த விசயத்தை சொல்லிவிடுகிறேன்.

நான் கடந்த பதிவில் சொன்னது மாதிரி ஒரு ஆன்மீகவாதிக்கு அதிகப்படியான உடல் சக்தி இருக்கும் என்று சொல்லியுள்ளேன். சாதாரண நபர்கள் தன்னுடைய மனதால் அனைத்து செயல்களையும் கற்பனையிலேயே செய்து முடித்துவிடுவார்கள். மனதால் கற்பனையில் செய்யும்பொழுது உடல் சக்தியை இழந்துவிடும். 

ஒரு ஆன்மீகவாதியின் மனது கற்பனையில் ஈடுபடாது. ஆன்மீகவாதி எந்த இடத்தில் அதாவது உண்மையில் தொடர்பு வைக்கும்பொழுது மட்டுமே வெளிப்படுத்துவார்கள். இந்த காரணத்தால் பெண்கள் விரும்புவார்கள்.தந்தரா பயிற்சியை ஆன்மீகவாதிகள் பயின்று இருப்பார்கள். நான் தான் சொன்னேன் அல்லவா. ஆன்மீகவாதியாக மாறும்பொழுது பல பயிற்சிகளை கற்றுவிடுவார்கள்.

இல்லறத்தில் இருப்பவர்கள் ஆன்மீகபயிற்சி செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன் அல்லவா. உங்களின் இல்லறம் நல்லறமாக இருக்க ஆன்மீகம் உதவும்.

ஆன்மீகவாதிப்போல் டான்சர்களையும் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அதற்கு காரணம் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி அப்படிப்பட்டது. கிருஷ்ண கடவுளை சுற்றி நிறைய பெண்கள் இருந்தர்க்கும் ஒரு காரணம் இருக்கின்றது. கிருஷ்ணன் ஒரு சிறந்த டான்சர். 

நிறைய விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் அவ்வப்பொழுது உங்களிடம் சொல்லுகிறேன். அனைத்தும் யாருமே சொல்லாத விசயங்களாக இருக்கும்.

பல நண்பர்கள் நினைப்பார்கள் ஒரு பிரம்மசாரியாக இருந்துக்கொண்டு எப்படி எல்லாம் எழுதுகிறார் என்று நினைக்கதோன்றும். காமசாஸ்திரத்தை எழுதியவரே ஒரு சாமியார் என்பதை உங்களிடம் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

பொதுவாக நான் எதனையும் தவறாக எடுத்துக்கொள்பவன் கிடையாது. அனைத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள். நமது மதத்தில் மக்கள் நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்க்காக நமக்கு நிறையபாடங்களை விட்டு சென்றுள்ளனர். காலத்தின் கோலம் நமது மக்களுக்கு அது போய் சேராமல் விட்டுவிட்டனர். இதனை எல்லாம் நம்மால் முடிந்தளவுக்கு உங்களுக்கு தருகிறேன். எனது வேதவாக்கு என்ன என்றால் நீங்கள் சந்தோஷமாக வாழவேண்டும். அதற்கு எப்படி வேண்டுமானாலும் என்னால் கீழே இறங்கி சொல்லிக்கொடுப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.