Followers

Thursday, June 5, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் நான் காமத்தைப்பற்றி எழுதியவுடன் பயந்துவிட்டேன் என்று எனக்கு சொன்னார்கள். இவரை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று நினைத்து பயந்தாக முதலில் நினைத்தோம் பிறகு அதில் உண்மை உள்ளது என்பதால் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொன்னார்கள்.

நான் மிக தெளிவாக உங்களிடம் சொல்லியுள்ளேன். என்னை யாரும் ஏற்றுக்கொள்ள வைப்பது எனது வேலை இல்லை. எனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை எடுத்து உங்களிடம் சொல்லுகிறேன். அது உங்களுக்கு நல்லதாக பட்டால் அதனை பின்பற்றலாம் இல்லை என்றால் விட்டுவிட்டு செல்லலாம்.

என்னை பொறுத்தவரை நான் எழுதிக்கொண்டே இருப்பேன். நான் யாரிடமும் போய் நிற்பதில்லை அதே நேரத்தில் இப்பொழுது எல்லாம் யாரையும் சந்திப்பது கூட கிடையாது. குரு என்னிடம் கொடுத்து ஒன்றை சொன்னார் யாரையும் நாம் நம்பி இருக்க தேவையில்லை என்று சொன்னார்.

என்னிடம் சக்தி இருந்தால் நாம் எதனையும் பெற்றுவிடமுடியும். நானும் மனிதன் நீங்களும் மனிதர்கள் தான் எனக்கு எதற்கு சிம்மாசனம். என் வேலையை நான் பார்த்துக்கொண்டு இருப்பேன். உங்களின் வழியை நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். தனியாக ராஜ்ஜியம் கட்டி ஆண்டால் தான் நமக்கு அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படவேண்டும். எனக்கு அப்படி ஒன்றும் கிடையாது.

என் வாழ்க்கையை நான் வாழபோகிறேன் உங்களின் வாழ்க்கையை நீங்கள் வாழபோகின்றீர்கள் இதில் எதற்கு நான் பிறரை கண்டு பயம்கொள்ளவேண்டும். உண்மை என்னவோ அதனை நான் எழுதுவேன்.

உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகமும் உங்களின் உடலுக்கு எதிராகவே இருக்கின்றது. எனது ஆன்மீகம் உங்களின் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். உடலின் முதல் சக்தியான காமத்தை நான் வெறுப்பதில்லை அதனை ஏற்றுக்கொள்கிறேன்.  அதற்க்காக நிறைய தகவல்களை எழுதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Kamathirku aanmeega vilipunarvu dhevai.neengal thodarnthu kamam saarntha padhivukal thara vendum.