Followers

Wednesday, June 4, 2014

சந்தோஷமாக வாழுங்கள்



வணக்கம் நண்பர்களே!
                    சோதிட அடிமைகள் என்ற பதிவை பாேட்டுருந்தேன். அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் நானும் அப்படி தான் இருக்கின்றோம் என்று என்னிடம் சொன்னார்கள். ஒரு சிலர் மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்கள். நல்ல காலம் அப்போ வரும் இப்போ வரும் என்று எதிர்பார்த்தே வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்று சொன்னார்கள்.

மனிதன் அனைத்தையும் பயன்படுத்தவேண்டும் மனிதனுக்காக இந்த உலகத்தில் நிறைய கொடுத்து இருக்கிறான் இறைவன். அதனை பயன்படுத்தி அவனின் வாழ்க்கை நல்வழிப்படுத்திக்கொள்ளவேண்டுமே தவிர அதற்காக படைத்த பொருட்களுக்கு அடிமையாகிவிடகூடாது.

கப்பலில் சென்று கொண்டிருக்கும்பொழுது கப்பல் விபத்துக்குள்ளாகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவசரத்திற்க்கு படகு வைத்திருப்பார்கள் அல்லவா. அதனை பயன்படுத்தி கரை சேரவேண்டும் அதனை விட்டுவிட்டு படகு அதுவாகவே கரைக்கு போய் சேர்ந்துவிடும் என்று நினைக்ககூடாது. கப்பல் என்பது வாழ்க்கை. படகு என்பது சோதிடம்.

கப்பல் என்ற வாழ்க்கை தென்றலும் வீசும் புயலும் வீசும் கப்பல் சிக்கி கொண்டால் படகு என்ற வழிதான் சோதிடம் அதனை பார்த்து திசை என்ன என்று பார்த்துக்கொண்டு கரை திரும்பிவிடவேண்டும். 

சோதிடத்தை அப்படி தான் பயன்படுத்த வேண்டுமே தவிர சும்மா நாள் முழுவதும் அதனை கட்டிக்கொண்டு அழுதுக்கொண்டு இருக்ககூடாது. மனிதனாக படைத்திருப்பதை அனைத்தையும் பயன்படுத்தி அவன் வாழ்க்கையை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

வாழும் நாட்கள் குறைவு. இப்பொழுது பிறந்தது போல் இருக்கும் திரும்பிபார்த்தால் வயது ஐம்பது என்று வந்துவிடும். போகும் காலம் கண்களுக்கு மிரட்டும். மனிதன் வாழ்வு சின்ன காலம் தான் அந்த காலத்தை தேவையில்லாத விசயங்களுக்கு பயன்படுத்தி சிதைத்துக்கொள்ளாதீர்கள். சோதிடத்தை பயன்படுத்துங்கள் பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லவில்லை. இத்தனை விசயங்களை கடவுள் நமக்கு கொடுத்துவைத்திருக்கும்பொழுது ஏன் நீங்கள் கவலைப்படவேண்டும். பயன்படுத்தி நன்றாக ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழுங்கள் என்று தான் நான் சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.