Followers

Monday, June 9, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                                ஒரு நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார். பேசும்பொழுது நான் எல்லாம் வழிபாட்டையும் செய்து வருகிறேன். எனக்கு மட்டும் இதுவரை நல்ல காலமே வரவில்லை. எந்த வழிப்பாட்டையும் செய்யாதவர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கின்றார்கள் என்று புலம்பினார்.

ஆன்மீகத்தில் இருந்தால் நல்லகாலம் மட்டும் தான் வரும் என்ற நினைப்பு மட்டுமே இவரின் புலம்பலுக்கு காரணமாக இருக்கின்றது. ஆன்மீகத்தில் இருந்தால் எப்பொழுதும் நமக்கு நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறான ஒன்று.

நல்லது நடக்கும் தீயதும் நடக்கும் என்றால் எதற்கு தேவையில்லாமல் வழிபாடுகளை செய்துக் கொண்டிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆன்மீகத்தில் இருக்கும்பொழுது நமக்கு வரும் பிரச்சினைகளை பார்த்து எதிர்க்கொள்ள ஒரு தைரியம் நமக்கு வரும்.

நமது வாழ்க்கை முறையை நல்ல முறையில் மாற்றிக்கொள்ள ஆன்மீகம் துணை நிற்க்கும். அதே நேரத்தில் ஆன்மீகவாதியின் வேண்டுதல்கள் வீணாக போவதில்லை. அதன் பலன் கிடைக்கும்பொழுது நமக்கு எல்லை மீறிய ஒரு வளர்ச்சியை கொடுக்கிறது.

ஆன்மீகத்தை நீங்கள் நாடும்பொழுது பொதுவாக அனைவரும் செய்யும தவறு. நான் ஆன்மீகவாதி என்று காட்டிக்கொள்வது. பிறர் தன்னை ஆன்மீகவாதி என்று நினைக்கவேண்டும் என்று ஒரு வேஷத்தை போட்டுவிட்டால் இந்த சமுதாயத்தின் பார்வையில் நீங்கள் பட்டுவிடுவீர்கள். நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்று இந்த சமுதாயம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

நீங்கள் கீழே விழும்பொழுது கை தட்டி சிரிக்கும். ஆன்மீகம் என்பது தன்னுள் நடக்கவேண்டுமே தவிர பிறர் பார்க்கும்படி தன் உடைகளை மாற்றி காட்டுவதால் ஒன்றும் நடைபெறாது. உங்களுக்குள்ளே ஆன்மீகத்தை வளருங்கள் கண்டிப்பாக அந்த ஆன்மீகம் உங்களை காப்பாற்றும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: