Followers

Saturday, July 12, 2014

விருந்தோம்பல்


வணக்கம் நண்பர்களே!
                    திருப்பூருக்கு இப்பொழுது தான் வந்து சேர்ந்தேன். உங்களுக்கு பதிவை உடனே எழுத ஆரம்பித்துவிட்டேன்.

இன்றைக்கு உள்ளவர்களுக்கு ஜாதகத்தில் சின்ன விசயத்திற்க்கே பெரிய அளவில் பிரச்சினையை மக்கள் சந்திக்கின்றனர். அதற்கு எல்லாம் கோள்கள் தான் காரணம் என்றாலும் நமது மக்கள் கடைபிடித்து வந்த பழக்க வழக்கத்தை மறந்ததும் ஒரு காரணமாக இருக்கிறது.

தமிழர்கள் என்றாலே விருந்தோம்பலுக்கு மிகசிறந்தவர்கள் என்று பெயர் பெற்றவர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். தனக்கு இல்லை என்றாலும் வந்த விருந்தினருக்கு விருந்து நல்ல முறையில் வைப்பார்கள்.

தற்பொழுது இந்த விருந்தோம்பலை ஒழுங்காக கடைபிடிப்பது இல்லை என்று தெரிகிறது. வீட்டிற்க்கு வருபவர்களுக்கு தண்ணீரை மட்டும் கொடுத்து அனுப்புவது வழக்கம் ஆகிவிட்டது.

உங்களின் வீட்டிற்க்கு ஒருத்தர் வருகிறார் என்றால் அந்த நபரை கடவுள் அனுப்பியுள்ளார் என்று நீங்கள் நினைக்கவேண்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். உங்களின் உறவினர்களுக்கு கூட நீங்கள் உணவை தரமுடியவில்லை என்றால் பிறருக்கு எப்படி உணவு தர நினைப்பீர்கள்.

நான் தனியாக தான் அடையாரில் தங்கியுள்ளேன். என்னை சந்திக்க வருபவர்களுக்கு என்னால் முடிந்தளவுக்கு விருந்தளித்து அனுப்புவது பழக்கம். சோதிடம் பார்க்க வரும் நபர்களை கூட நான் நல்ல முறையில் உபசரித்து அனுப்பவேண்டும் என்று தான் நினைப்பேன்.

உங்களின் வீட்டிற்க்கு ஒருத்தர் வந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி அவருக்கு முடிந்தளவு உணவை அளிக்கபாருங்கள். உங்களின் மொத்த தோஷமும் விலகிபோய்விடும்.

ஒரு மனிதன் எனக்கு இதுபோதும் என்று நினைக்கும் விசயம் உணவு ஒன்று தான். அந்த உணவை அனைவருக்கும் வழங்கி நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: