Followers

Friday, July 18, 2014

அனுபவமே கல்வி


வணக்கம் நண்பர்களே!
                    என்னுடைய தொழில் நண்பர்களோடு சந்திக்கும்பொழுது பல நல்ல விசயங்களைப்பற்றி விவாதிப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நல்ல விசயத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

என்னுடைய தொழில் நண்பர்கள் அவர்களின் குழந்தைகளை அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.அவர்களின் குழந்தைகள் அரசாங்க பள்ளியில் படித்தால் போதும் என்கிறார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டேன். குழந்தைகளுக்கு அதிகமான சுமையை நாம் தந்துவிடகூடாது என்கிறார்கள். அவர்கள் என்னிடம் கண்டிப்பாக எங்களின் குழந்தைகளை பெரிய அளவில் படிக்கவைப்போம். அதற்கு அரசாங்க பள்ளிக்கூட படிப்பே போதுமானது என்கிறார்கள்.

தனியார் பள்ளியில் கொடுக்கும் கல்வி அதிக சுமையை தருகிறது. அந்த சுமை இவர்களுக்கு மனதில் பிரச்சினையை கொடுத்துவிடும். காலையில் தூங்கி எழுந்து ஒன்பது மணிக்கு பள்ளிக்கு சென்றால் போதும். பள்ளிக்கூடத்தை விட்டு வந்தவுடன் நன்றாக விளையாடினால் போதும் என்கிறார்கள்.

அவர்கள் சொல்லுவது உண்மையான ஒரு செய்தி தான். குழந்தைகளுக்கு அதிகசுமையை ஏன் தரவேண்டும். அரசாங்க பள்ளிப்படிப்பே போதுமானது. அந்த குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே அவர்களின் பெற்றோர்கள் அனைத்து விசயத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் அந்த குழந்தைகளிடம் பேசும் பொழுது அப்படி ஒரு அறிவு இருக்கிறது.

என்னிடமே அதிகமான கேள்விகளை அந்த குழந்தைகள் கேட்கிறது என்றால் பாருங்கள். குழந்தைகள் கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு அனைத்து பெற்றோர்களும் பதிலை அளிக்கவேண்டும். அவர்கள் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் உடனே நான் விடையை தெரிந்த பிறகு உனக்கு சொல்லுகிறேன் என்று சொல்லிவிடுங்கள். பிறகு விடையை நீங்கள் தெரிந்தக்கொண்ட பிறகு அவர்களுக்கு சொல்லுங்கள்.

என்னிடம் ஒரு சின்ன குழந்தை வளர்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். குறைந்தப்பட்சம் ஒரு ஆறு மாதம் வளர்ந்தால் போதும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களால் கூட பதிலை கொடுக்கமுடியாது.

அனைத்து பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளுக்கு சின்ன வயதில் நேரத்தை ஒதுக்கி சொல்லிக்கொடுத்தால் பள்ளிகூடத்திற்க்கான வேலையே இல்லாமல் போய்விடும். தொழில் செய்பவர்களுக்கு பண்த்தைப்பற்றி பெரிய கவலை கிடையாது ஆனாலும் தன் குழந்தைகளுக்கு நல்ல அறிவை அவர்களே ஊட்டுகிறார்கள். குழந்தைகள் என்ஜாய் செய்து கற்றுக்கொள்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: