Followers

Friday, July 4, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் பக்தி மார்க்கத்தைப்பற்றி கேள்வி கேட்டுருந்தார். பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை எளிதாக அடையலாம் அதனை நாம் பின்பற்றிலாமே ஏன் உடலை போட்டு வருத்தி தியானம் யோக எல்லாம் செய்யவேண்டும் என்று கேட்டார்.

பக்தி மார்க்கத்தின் வழியாக எளிதில் கடவுளை அடையமுடியும் ஆனால் நாம் வைக்கும் பக்தியின் அளவில் சந்தேகம் வருகிறது. நாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறோம். நாம் சாமி மட்டும் கும்பிட்டால் பக்தி கிடைத்துவிடும். நாம் எதிர் வரிசையில் நிற்க்கும் பெண்ணையும் பார்க்கிறோம். நமது எண்ணம் சாமியை விட்டு எதிர் திசையில் பயணம் செய்கிறது.

நமது எண்ணத்தை முழுமையாக கடவுள் மீது செலுத்த முடியும் என்றால் கண்டிப்பாக பக்தி மார்க்கத்தை பின்பற்றுங்கள். பக்தி மார்க்கத்தில் கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையே சந்தேகத்தோடு தான் வைக்கிறோம் அப்படி இருக்கும்பொழுது எப்படி நாம் பக்தி மார்க்கத்தை பின்பற்றமுடியும்.

பொதுவாக தமிழர்களுக்கு நாத்திக இரத்தம் அதிகம் ஒடும் எதனையும் பல முறை சோதனை செய்து தான் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடு இருப்பார்கள். வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு பக்தி மார்க்கம் சரியான வழியாக இருக்கும்.

கடவுள் தன்னுடைய அவதாரத்தை எல்லாம் வடஇந்தியாவில் தான் நடத்தி இருப்பார்கள். தன் பக்தர்களுக்குகாக கடவுள் அவதாரத்தை எடுத்து இருப்பார்.அந்தளவுக்கு பக்தியை கடவுளின் மேல் வடஇந்தியர்கள் வைப்பார்கள். நம்ம ஆளுங்க எல்லாம் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்து அதனைப்பற்றி போதனை தான் செய்வார்கள்.

பக்தி மார்க்கத்தின் வழியாக கடவுளை அடையமுடியும் ஆனால் நம்ம மனநிலை அந்தளவுக்கு பக்குவபடவில்லை. நாம் யோகம் தியானத்தை பின்பற்றி அடையலாம். பக்திமார்க்கத்திற்க்கு செல்லும் மனநிலையில் இருந்தால் தாராளமாக பின்பற்றலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: