Followers

Friday, July 11, 2014

கேள்வி & பதில்



வணக்கம் நண்பர்களே!
                    செல்போனைப்பற்றி எழுதியிருந்தேன். அந்த பதிவை படித்த ஒரு நண்பர் என்னிடம் ஒன்றைப்பற்றி சொன்னார். சம்பாதிப்பதை ஜாலியாக அனுபவிக்க தானே நாம் அனுபவிக்கவில்லை என்றால் பிறகு எதற்கு அந்த பணத்தை சம்பாதிக்கவேண்டும் என்று கேட்டார்.

சம்பாதிப்பதை அனுபவிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நன்றாக அனுபவியுங்கள். அதற்கு ஏன் தேவையற்ற விசயத்தில் உங்களின் பணத்தை செலவு செய்யவேண்டும். ஒரு போன் வாங்கினால் போதும். போன் கம்பெனியில் புதிய மாடல்கள் வந்துக்கொண்டே இருப்பதால் அத்தனை மாடல்களும் வாங்கிக்கொண்டு இருந்தால் உங்களின் பணம் தான் செலவாகும்.

பொதுவாக இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு உங்களின் தாய் தந்தையரின் உழைப்பு பின்புலமாக இருக்கும். அவர்கள் கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைத்ததால் நீங்கள் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறீர்கள். அவர்கள் ஜாலியாக இருக்கவேண்டும் என்று உங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்தால் உங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்த்தால் தெரியும்.

கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு செல்லுகிறீர்கள் நீங்கள் கொஞ்ச காலம் அனைத்து விசயத்திலும் கவனமாக இருந்து சேமித்து வந்தால் குறுகிய காலத்தில் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று கூட தெரியாதா நிலைமை ஏற்படும். அந்த நேரத்தில் ஜாலியாக இருங்கள்.

கிராமத்தில் இருந்து வரும் இளைஞர்கள் நகர்புற வாழ்க்கையை கண்டு காசை வீணாக விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் கருத்து நன்றாக இருக்கும். தந்தை நல்ல பணக்காராக இருந்தால் ஒரு செல்போனுக்கு பத்து செல்போன் கூட வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

ஜாலியாக இருப்பது என்றால் செல்போனோடு தான் ஜாலியாக இருக்கவேண்டுமா? நல்ல விசயங்கள் எத்தனையோ இருக்கின்றது. அந்த வழியில் ஜாலியாக இருங்கள். பொருட்களுக்காக மனிதன் வாழகூடாது. மனிதனுக்காக பொருட்கள் இருக்கவேண்டும். பொருட்களோடு மனிதன் குடும்பம் நடத்த ஆரம்பித்த காரணத்தால் மட்டுமே குடும்பங்களில் அன்பு இன்று கேள்வி குறியாகிவிட்டது. மனிதன் மனிதனோடு அன்பு செலுத்தவேண்டும்.

பணத்தை சேமிப்பதற்க்கு வழிகளை சொல்லுகிறேன். கடைபிடித்தால் நாளை நன்றாக இருப்பீர்கள். செலவு செய்தால் நாளை எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். எல்லாம் உங்களின் கையில் தான் இருக்கபோகின்றது.

இன்றைக்கு விற்க்கும் விலைவாசிக்கு சிக்கனம் என்பதை கடைபிடிக்கவில்லை என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் நீங்கள் நாளை தெருவிற்க்கு வந்துவிடுவீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: