Followers

Wednesday, July 23, 2014

ஆடி அமாவாசை


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு ஆடி அமாவாசை சிறப்பு பதிவை ஒன்றை கண்டிப்பாக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார். அவரின் விருப்பத்திற்க்காக இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன்.

திரும்பி பக்கம் முழுவதும் ஆடி அமாவாசைப்பற்றி தான் வருகிறது. இதில் நாமும் சொல்ல வேண்டுமா என்று தான் நினைத்துக்கொண்டுருந்தேன். ஒரு சின்ன விசயத்தை முதலில் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பித்ருதோஷம் தான் இன்றைய இளைய தலைமுறையினரை போட்டு தாக்கும் ஆயுதங்களில் மிகப்பெரியது என்று சொல்லலாம். இவர்களுக்கு தாய் தந்தை இருப்பதால் இவர்கள் அமாவாசையை விரதம் பின்பற்றமுடியாது. உங்களுக்கு தோஷம் இருப்பதால் அதனை போக்க ஒரு வழி உள்ளது.

தோஷம் போக்கும் விசயத்தில் முதலில் இருப்பது பசு மாடு. இன்றைய காலத்தில் பசுமாட்டை தேடிப்பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கும். பசு மாட்டை நீங்கள் தேடிபிடித்து அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு உணவை அளியுங்கள். 

கோவிலில் உள்ள பசுமாட்டிற்க்கு நீங்கள் கொடுத்தால் அன்றைய தினம் அதிகமான பேர் அதற்கு கொடுத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட பசுவிற்க்கு நீங்கள் கொடுக்கவேண்டாம். ஏதாவது ஒரு பசுமாட்டிற்க்கு கொடுங்கள். 

பட்டினியோடு இருக்கும் பசுமாட்டிற்க்கு கொடுங்கள். கண்டிப்பாக அன்றைய அமாவாசையை நீங்கள் நன்றாக பயன்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். 

தாய் மற்றும் தந்தை யாராவது ஒருவர் இறந்து ஒரு வருடம் சென்றால் அவருக்கு நீங்கள் விரதம் இருக்கலாம். காலையில் சாப்பிடாமல் இருந்து மதியம் இரண்டு மணிக்கு மேல் விரதம் செய்யலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: