Followers

Tuesday, July 8, 2014

இல்லறம் என்னும் நல்லறம்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு ஒரு சில காலத்தில் காதலர்கள் தொல்லை இருந்தது. இப்பொழுது விவாகாரத்து பெற்றவர்கள் தொல்லை அதிகரித்துவருகிறது. சார் எனது கணவரோடு சேர்த்து வையுங்கள். எனது மனைவியோடு சேர்த்து வையுங்கள் என்று பல நண்பர்கள் தினமும் போன் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இருபாலரும் இணையும் பொழுது கருத்து வேறுபாடு ஏற்படுவது இயற்கையான ஒன்று. இருவரும் விட்டுக்கொடுத்து செல்லும்பொழுது உங்களின் குடும்ப பாரம்பரியம் காக்கப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. ஆண்கள் கூட பரவாயில்லை. பெண்களின் நிலைமை மோசமாக இருக்கின்றது. அமெரிக்காவில் இருந்துக்கொண்டு எனக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு முறை இந்தியா வந்து சந்தித்துவிட்டு அதன் பிறகு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள் என்றால் விசா பிரச்சினை என்கிறார்கள்.

தனிநபர்களுக்கு பரிகாரம் செய்வதை நிறுத்திவிட்டேன். அப்படி இருந்தும் இவர்கள் கெஞ்சுவதால் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் இவர்கள் சொல்லும் பெயர் கூட உண்மையாக இருப்பதில்லை. எப்படி நம்பி செய்வது பெயரில் கூட இப்படி இருந்தால் இவர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் நடந்துக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

இந்தியாவில் பிறந்துவிட்டு வெளிநாட்டிற்க்கு சென்றாலும் அங்குள்ள கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கியவுடன் தான் பிரச்சினை தொடங்கிறது என்று நினைக்கிறேன். ஆணுக்கு பெண் நிகராக சம்பாதித்தாலும் ஒரு சில காலகட்டத்தில் பெண்கள் தனியாக வாழும்பொழுது அதிகப்படியான மனஉளச்சலுக்கு ஆளாகிவிடிவீர்கள். உங்களை பார்த்து உங்களுக்கே பிடிக்காமல் போய்விடும். அதனால் என்ன தான் பிரச்சினை என்றாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த பிறகு சேர்வது என்பது கோடியில் ஒருவருக்கு வேண்டுமானால் நடைபெறலாம். எல்லாருக்கும் நடந்துவிடாது. அதுவும் ஆன்மீகவழியில் சேர்ப்பது எல்லாம் மிகப்பெரிய கடினம் ஆனால் நம்ம ஆட்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி காசு பார்த்துவிடுவார்கள். 

கணவன் மனைவிக்கு எப்படி பிரச்சினை வந்தாலும் குடும்பம் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இது மட்டும் தான் இதில் சொல்லகூடிய பரிகாரம்.

இரண்டு பேருக்கும் பிரச்சினை தீரவில்லை என்றால் இருவரும் சோதிடர்களை சந்தித்து என்ன பிரச்சினை என்று பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: